தமிழகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கொடுங்கந்தாங்கல் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க கிராம மக்கள் மனு !!

27views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கொடுங்கந்தாங்கல் கிராம மக்கள் வேலுர் மாவட்ட பொன்னை நீர்பாசன பிரிவுநீர் வளத்துறை உதவி பொறியாளர் அம்ரிஷிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கொடுங்கந்தாங்கல் கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகிறோம், இங்கு பொன்னி அம்மன் கோயில் அருகே ஆழ்துளை கிணறு மூலம் மக்களுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆழ்துளை கிணறு அருகே அமைந்துள்ள தடுப்பு சுவரை சிலர் இடித்து தள்ளி உள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆழ்துளை கிணறு அருகே சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் மழை காலங்களில் நீர்வரத்து பிரச்னை ஆகிவிடும், குடிநீர் கிடைப்பதிலும் பிரச்னை வரும், அருகில் உள்ள அரசின் புறம்போக்குநிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, ஆகவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, தடுப்பு சுவரை கட்டி தர வேண்டும் என்றும் தங்களின் கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!