கவிதை

‘கிருஷ்ண ஜெயந்தி’ பாடல்!

145views
கவிஞர் சேலம் சங்கர் எம்.ஏ.,
கண்ணன் பிறந்தான் – கோகுல
மன்னன் பிறந்தான்.
ஆஹா! ஜெயந்தி!
கிருஷ்ண ஜெயந்தி!
வீடுதோறும் மாக்கோலம்
வீதியெலாம் தோரணங்கள்!
ஆஹா ஜெயந்தி!
கிருஷ்ண ஜெயந்தி!
குட்டிக் கண்ணன் பாதங்கள்,
தரையெங்கும் கோலங்கள்!
குழலூதும் கண்ணன் கீதங்கள்!
ஆஹா! ஜெயந்தி!
கிருஷ்ண ஜெயந்தி!
வெண்ணைய் திருடும் கண்ணா!
முகமெலாம்… வெட்கம் ஏனோ?
குழலூதும் கண்ணா!
வாய்த் திறந்து சிரிப்பதேனோ?
ஆஹா! ஜெயந்தி!
கிருஷ்ண ஜெயந்தி!
கண்ணன் பிறந்தான் கோகுல மன்னன் பிறந்தான்!
பீச்சாங்குழல் பீச்சும் வர்ண நீரின் கோலங்கள்!
கோகுல கண்ணனின் ஜாலங்கள்!
கண்ணன் பிறந்தான் – கோகுல மன்னன் பிறந்தான்;
ஆஹா! ஜெயந்தி!
கிருஷ்ண ஜெயந்தி!

2 Comments

  1. அஷ்டமி திதியில்
    அவதரித்த கண்ணனை
    ஆனந்தக் களிப்போடு
    ஆசையாய் கவிதையிலே
    வாசுதேவனை வரவேற்கும
    வாஞ்சையுள்ள கவிஞரை
    வணங்கி வாழ்த்துகிறேன்.🙏🙏🙏👏👏

  2. அருமையான வரிகளை கொடுத்தவருக்கு நன்றிகள்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!