கவிதை

என்ன உடுத்தியிருப்பாள் அவள்?

193views
ஆன்லைனில் ஆயிரம் ஆடைகளை
ஸ்க்ரோல் செய்து, “இதில் ஒன்றும்
எனக்கு செட் ஆகல” என்று சலித்து,
அலமாரி நிறைய துணி இருந்தும்
“உடுத்த ஒண்ணும் இல்ல” என்று
மீண்டும் கார்ட்டில் போட்டு,
கேஷ் ஆன் டெலிவரி செய்த போது
நினைவுக்கு வருகிறாள்—
சிக்னலில் கிழிந்த சேலையை
முடிச்சுப் போட்டு மானம் மறைத்து,
மழைக்குப் போர்த்திக் கொள்ளக்கூட
ஒரு துணி இல்லாமல்
நனைந்து கொண்டே
கை நீட்டும் அந்த கிழவி!
முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி
சென்னை

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!