தமிழகம்

காட்பாடியில் மறைந்த தனது மகனின் நினைவாக கபடி போட்டி நடத்திய தந்தை

191views
வேலூர் மாவட்டம், காட்பாடி மதி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு விக்னேஷ் (12) என்கின்ற மகன் இருந்தார். இவர் கபடியில் மிகவும் ஆர்வம் மிகுந்தவராக திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற 12 வயது மாணவன் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது தந்தை சுரேஷ் மகன் கபடி மீது வைத்திருந்த ஆர்வத்தை எண்ணி கலங்கி நின்றார். கபடி மீது தனது மகன் மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்ததை நினைவு கூறும் வகையில் கபடி போட்டியை நடத்த திட்டமிட்டார். ஆகையால் மகனின் நினைவை போற்றும் வகையில் காட்பாடி பகுதியில் மாபெரும் கபடி போட்டியை அண்மையில் நடத்தினார்.
இதில் வேலூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்த 42 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டன. முதல் இடம் பிடித்த அணிக்கு ஐந்தாயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 3 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கினர்.
திடீரென உடல் நலக்குறைவால் இறைந்த மகனின் நினைவாக தந்தை நடத்திய கபடி போட்டியைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து போட்டியை கண்டுகளித்தனர்.  அது மட்டுமின்றி இறந்த தனது மகனின் நினைவாக கபடி போட்டி நடத்திய தந்தையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!