தமிழகம்

சிவகாசியில் அய்யப்ப சுவாமி பக்தர்கள் ஏராளமானோர், மாலை அணிந்து விரதம் துவக்கினர்

128views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று ஏராளமான அய்யப்ப சுவாமி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கியுள்ளனர்.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை ஸ்ரீஅய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இன்று கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு, அதிகாலையில் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், குருசாமிகள் ஆசியுடன் மாலை அணிந்து கொண்டனர்.
சிவகாசி சிவன் கோவிலில் உள்ள ஸ்ரீஅய்யப்ப சுவாமி சன்னதியில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சின்னக்கருப்பாயி அம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீஅய்யப்ப சுவாமி சன்னதியில், குருசாமி சேகர் தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர்.
மேலும் திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இன்று மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்களில் பெரும்பாலானவர்கள், சபரிமலை ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜைக்கு செல்வார்கள்.
மேலும் மகர ஜோதி தரிசனம் காண்பதற்கும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள். இன்று முதல், தை மாதம் ஒன்றாம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்திலும், அய்யப்ப சுவாமி பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!