தமிழகம்

கஞ்சா கடத்தலில் புதுடெக்னிக்: மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிவித்து ஆந்திராவில் இருந்து குடும்பத்துடன் மதுரைக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது: 20 கிலோ கஞ்சா பறிமுதல்

382views
மதுரையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக காவல் ஆணையர் நரேந்திர நாயர் உத்தரவின் பேரில் நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தெப்பக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வைகை ஆற்று பாலம் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் அவரது மனைவி சிவராணி இருவரையும் நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தபோது கஞ்சா பண்டல்கள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசாருக்கே உரிய பாணியில் விசாரணை நடத்தியதில்  மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த அய்யனார் மனைவி உஷா,அதே பகுதியை சேர்ந்த திருக்கம்மாள்,சம்மட்டிபுரம் ராஜூவ் நகர் பகுதியை சேர்ந்த ரேவதி ஆகியோர் சேர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து குடும்பத்துடன் (குழந்தைகளுடன்) ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்று மொத்தமாக கஞ்சா வாங்கி பண்டல் பண்டலாக பிரித்து, குழந்தைகளுக்கு தலா ஒரு பண்டலும், பெரியவர்கள் தலா இரண்டு மூன்று பண்டங்கள் என தனது கட்டைப் பைகளில் மறைத்து கடத்தி வந்து மதுரையில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டு சிறிய பொட்டலங்களாக விற்பனை செய்வதும் விசாரணையில் தெரிய வந்தது. கணவன் மனைவி இருவரும் கொடுத்த தகவலின் பெயரில்  மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கஞ்சா பண்டல்களுடன் காத்திருந்த ரேவதி, உஷா, திருக்கம்மாள் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த கஞ்சா பண்டல் களையும் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகரில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தது பரப்பரப்பை ஏற்படுத்தியது.  மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோவிலுக்கு மாலை அணிந்து குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் செல்வது போன்று சென்று ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வந்த சம்பவம் குறித்து கஞ்சா கடத்தலில் இப்படியும் ஒரு புது டெக்னிக்கில் கடத்தி வருவது புதுசா இருக்கே என காவல்துறையினர் கூறி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!