தமிழகம்

ஏராளமான பெண்கள் கைகளில் காப்புகட்டி” சஷ்டி விரதத்திற்காக கோயில் மண்டபத்தில் தங்கியுள்ளனர்.

189views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள விசாக கொரடு மண்டபத்தில் யாகசாலை பூஜையுடன் , காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது
25 ஆம் தேதி முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும்.
விழாவில் இன்று காலை 8 மணிக்கு சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் வள்ளி, தேவ சேன சமேத சண்முகருக்கு முருகனின் பிரதிநிதியாக நம்பி பட்டருக்கு காப்பு கட்டி பின்னர் பக்தர்களுக்கு கம்பத்தடி மண்டபத்தில் காப்புகட்டுதல் நிகழ்சி நடைபெறும்.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். ‘

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 29ஆம் தேதி கோர்த்தான அம்பிகையிடம் இருந்து சூரபத்மனை அழிக்க ” சக்திவேல்” வழங்கும் விழா நடைபெறும்.
பின்னர் வரும் 30 தேதி மாலை சூரபத்மனை அழிக்க முருகன் சக்திவேலை கொண்டு சன்னதி தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சூரபத்மனை அழிக்கும் “சூரசம்ஹார லீலை” நிகழ்ச்சி நடைபெறும்.
வரும் 31ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் நிறைவினை ஒட்டி முருகன் சட்டத்தேரில் வீதி உலா பவனி வருவார்’

வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் மண்டம் மற்றும் சஷ்டி மண்டபங்களில் தங்கி காப்பு கட்டி 7 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற் கொள்வார்கள்.
கந்த சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் எலுமிச்சை சர்கரை பழச்சாறு,பால். வாழைப்பழம் மற்றும் திணைமாவு ஆகியவை உணவாக கொண்டு கடும் விரதம் மேற்கொள்வார்கள்.

சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பழமொழியாகவே உள்ளது
“சஷ்டியிரு(விரதமிரு)ந்தால் அகப்பையில் குழந்தை வளரும்”
என்பதே சட்டியிலிருந்தால் அகப்பைக்கு வரும் என மாறியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!