95views
மக்கள் நீதி மையம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், மதுரை எங்கும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனே சீரமைத்துக் கொடுக்கவேண்டியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஆசைத்தம்பி முன்னாள் மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார்.
தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் வடக்கு தொகுதி R.R ரமேஷ், திருப்பரங்குன்றம் தொகுதி மாநகர செயலாளர் வழக்கறிஞர் சிவகுமார், சந்திரன் செல்லூர் தெற்கு தொகுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை அமைப்பாளர் மேற்கு IT தினேஷ் பாபு , 30வது வட்ட செயலாளர் தெற்கு தொகுதி சீனிவாசன் வரவேற்புரையும், வடமேற்கு மாவட்டம் மாநகர செயலாளர் A. நம்மவர் செந்தில் நன்றியுரை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் மண்டல, மாவட்ட, நகர ஒன்றியம் மற்றும் விடுவிக்கப்பட்ட மய்ய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தமிழக அரசை வலியுறுத்தி மேற்கண்ட கோரிக்கைகளை முழக்கங்களாகவும் அரசுக்கு கோரிக்கையாகவும் விடுத்தனர்.