தமிழகம்

மதுரையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 8டன் ரேசன் அரிசி, லாரி பறிமுதல்-  ஓட்டுநர் கைது

67views
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு லாரியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத்தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது லாரியில் 165 மூடைகளில் 50 கிலோ வீதம் வைக்கபட்டிருந்த 8டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து லாரியை ஒட்டி வந்த மதுரை காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த காளிமுத்து கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளியான நேரு என்பவரை தேடி வருகின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர். வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!