தமிழகம்

ராமநாதபுரத்தில் மின்சார வாரிய ஓய்வு அதிகாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

41views
ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கொலை வழக்கில் முதியவர் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை, 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் அருகே ஓய்வு பெற்ற மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் தமிழரசன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மதியம் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் , முன் விரோதம் காரணமாக தாக்கி படுகொலை செய்தது.
இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா, இக்கொலையில் தொடர்புடைய தில்லை நாயகபுரம் கோபால் மகன் மாதவன் மகேஷ் 34, செல்வம் 34 ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பளித்தார். மேலக்கோட்டைகோபால் 81, அச்சந்தன்வயல் சீனிவாசன் 46, கோபால் மகன் பாலயோகேஷ் 32, தில்லைநாயகபுரம் விஜயகுமார் 42, முத்துராஜா 37, கோபி 40 ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!