தமிழகம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களை இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்றுஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர்

103views
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தை ஒன்றாம் தேதியான ஜனவரி 15-ஆம் தேதி இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதால் அதற்கான பணிகள் நேற்று காலை தொடங்கப்பட்டது.
தொடர்ந்து கம்புகள் உண்டும் பணியானது நடைபெற்று வந்த நிலையில், காளைகளுக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், வாடிவாசல் மற்றும் மாடுகள் வெளியே செல்லும் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும், கம்புகள் கட்டும் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வாடிவாசல் இருபுறமும் கம்புகள் கட்டும் பணி கலெக்ஷன் பாயிண்ட் வரை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினர்
இந்த ஆய்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிப்ரஜித் சிங்கா மதுரை மாநகர தெற்கு காவல் ஆணையர் சாய் பிரணீத் மற்றும் மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு மண்டலம் குழு 5 தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு காலணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து வாடிவாசல், வீரர்களுக்கு சோதனை செய்யும் இடம், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் இடம், கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் உயிரிழப்புகள் எதுவும் இந்தாண்டு நடைபெறாமல் இருப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மதுரை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் உள்ளிட்டோர் உத்தரவிட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!