தமிழகம்

மதுரை அலங்காநல்லூரில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கோவில் செயல் அலுவலர் செயல்படுவதாக முத்தரையர் சமுதாயத்தினர் புகார் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட கோரிக்கை

119views
உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு முன்பாக நடைபெறும் அலங்காநல்லூர் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக செயல் அலுவலர் மீது ஒரு சமுதாயத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் திருவிழாவிற்கு தற்காலிக குழு அமைக்க கூடாது என்றும் செயல் அலுவலர் தலைமையில் தான் திருவிழா நடத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற முனியாண்டி கோவிலின் கீழ் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் சமயங்களில் நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவின் தொடர்ச்சியாகவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டும் இந்த திருவிழாவுக்கான செவ்வாய் சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 10 தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.  அலங்காநல்லூர் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதற்காக கடந்த காலங்களில் நிர்வாக அதிகாரியாக செயல்பட்டவர்கள் தற்காலிக குழு அமைத்து திருவிழா நடத்துவது சம்பிரதாயமாக இருந்து வந்துள்ளது.
அதே நேரத்தில்அந்தக் குழுவில் சில குறிப்பிட்ட சமுதாயத்தை முக்கியத்துவப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே பரவலான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளது.  இதனை கருத்தில் கொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு சமுதாயத்தினர் அதாவது முத்தரையர் சமுதாயத்தினர்.சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்காலிக குழு அமைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஆனால் தற்போதுள்ள ஆளுங்கட்சியினரின் தலையீடு காரணமாக அதனை மீறும் வகையில் தற்போது நடைபெறும் திருவிழாவிற்கு தற்காலிக குழு அமைத்தது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினை புறக்கணிப்பதாகவும் ஒரு சமுதாயத்திற்கு ஆதரவாகவும் செயல்படுவதாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் செயல் அலுவலர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.  இதன் காரணமாக திருவிழா நடைபெறும் சமயங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.  ஆகையால் மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் நேரில் விசாரித்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட குழுவை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து  பெரிய கங்கை என்பவர் கூறும் போது :  அலங்காநல்லூர் அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட முனியாண்டி கோவில் காளியம்மன் கோவில் அய்யனார் கோவில் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு செயல் அலுவலர் அவர்களே தனது கட்டுப்பாட்டில் திருவிழா நடத்த வேண்டும் என்றும் இதற்காக குழு அமைப்பதில் அரசியல் தலையீடு காரணமாக பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாகவும் ஆகையால் குழு அமைக்க கூடாது என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்நீத மன்ற மதுரை கிளையில் மனு போட்டு உத்தரவு பெற்றிருந்தோம்.

ஆனால் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக குழு அமைத்து திருவிழா.நடத்துவதும் அதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை புறக்கணிப்பதுமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது இதனால் திருவிழா நடைபெறும் சமயங்களில் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆகையால் செயல் அலுவலர் நேரடி பார்வையில் திருவிழா நடத்த வேண்டும் என்றும் செயல் அலுவலரிமும் நேரில் மனு கொடுத்தோம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகையால் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சித் தலைவரும் நேரில் விசாரணை செய்து திருவிழா காலங்களில் பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!