நேர்காணல்

உரக்க கேட்கட்டும் சாமானியனின் குரல்

676views
தலைநகரான சென்னையில் தலைவிரி கோலத்தில் காட்சியளிக்கும் போக்குவரத்து. அதனையே தனது வாழ்வாதாரமாக ஏற்றுக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக தன் தேவையினையும் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையினையும் தாங்கியபடி தினமும் சவாரி ( வேலைக்கு ) செல்லும் இந்த தின தொழிலாளி ( AUTO DRIVER )   திரு.மு.நாகராஜன்அவர்களுடனான பயணமே இப்பத்தி.
தற்போதைய ANDROID உலகில் எங்கு செல்லவேண்டும் என்றாலும் GOOGLE MAPயின் உதவியுடன் சென்றுவிடுகிறோம், ஏன் பல நேரங்களில் அதுவே தவறான வழிகளை காட்டி நம்மை அலையவிடும். ஆனால் தொழில்நுட்பத்தின் அர்த்தம் தெரியாத நாள் முதல் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி போக்கில் இருக்கும் இன்று வரை நடமாடும் MAP’கள் ஆட்டோ ஓட்டுனர்களே. திசை தெரியாமல் திகைத்து நிற்பவர்களின் தீசைமானிகள், எப்படி செல்ல வேண்டும் என்று வழி தேடுபவர்களின் வழிகாடிகள் என்று பல பெயர்கள் சொல்லாம் ஆனால் இவரின் ( இவர்களின் ) வாழ்க்கை  மேம்பட ஏதேனும் வழிகள் உள்ளத ? ஊருக்கே வழி சொல்லும் இவருக்கு (இவர்களுக்கு) இன்னும் வாழ்வாதாரம் மேம்பட வழி தெரியவில்லை.
“இருவது வருஷத்துக்கு முன்னாடி ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்ச போது பெரிய கஷ்டம்-ன்னு சொல்ல பெருசா ஒன்னும் இல்ல அன்னைக்கான சம்பளம் மறுநாளோட செலவுக்கு சரியாய் போய்டும் , SAVINGS-ன்னு பெருசா ஒன்னும் இருக்காது, ஆனா குடும்பம் வளர்ந்த அப்றோ எல்லாமே பெரியா பிரச்னையா ஆகிடுச்சி.” –   தனி மனிதனின் பொருளாதார நிலையினையும் அதன் நெருகடியினையும் இவரின் இந்த வார்த்தைகள் மூலம் எளிதில் அடையாளபடுத்த நம்மால் முடியும்.
ஆண்டுகள் ஆகா ஆக நாடோ வளர்ச்சி பாதையினை நோக்கி செல்கிறது. ஆனால், அந்நாட்டில் உள்ள உழைக்கும் வர்க மக்களில் வாழ்க்கை  வளர்ச்சியினை நோக்கி செல்கிறதா என்ற கேள்விக்கு பதில் தேட தேவையில்லை. அனைவரும் அறிந்ததே பதில்.
அரசின் நிதி அறிக்கையில் ஆண்டுக்கு ஆண்டு நிதி தொகையின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே போகிறது, மக்களின் வாழ்க்கை  நலனுக்காக என்று. ஆனால், இவரைபோன்ற தின கூலி தொழிலாளிகளின் அதும் சென்னை போன்ற பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும் மக்கள் தொகை கொண்ட வடசென்னை போன்ற இடங்களில் இன்னும் அன்றாட தேவைகளுக்கு தினம் தினம் போராடும் பலரின் வாழ்க்கை  தரம் அதிகரிக்கவில்லை.

  • திரு. நாகராஜன் அவர்களிடம் கேட்ட சில கேள்விகள் :
பிறந்ததுல இருந்து இங்கே இருக்கீங்க, ஆனா உங்க வாழ்க்கைல எந்த மாற்றமும் இல்லையா ?
“சின்ன வயசுல இருந்தே நெறைய கஷ்டத்தை மட்டும் பார்த்து வளர்ந்தவன் தான் நானு, என் வாழ்க்கைல தனிப்பட்ட மாற்றங்கள்ன்றத  விட நான் பார்த்து மாறியது நெறைய , நாங்க இருக்க AREA ல அப்போ எல்லாமே காலி  மைதானங்கள் தான் ஆனா இப்போ காலி இடம்ன்னு எதையும் பக்க முடியல நெறைய கட்டிடங்கள் மக்கள் தொகை,  OFFICE, COMPANY, FACTORY  ன்னு இதன் நிறையா மாறி இருக்கு. நான் படிக்குற வயசுல படிப்பு மேல பெரிய ஆர்வம்  இல்லாமதான் இருந்தேன் காரணம் குடும்ப சூழ்நிலை,  ஒருகட்டத்துல 15 வயசுல வேலைக்குப்போக ஆரம்பிச்சேன் என் குடும்ப பொருளாதார நெருகடினால , அன்னைக்கு கூலி வேலைக்கு போனவன் இன்னைக்கு வரைக்கும் தின கூளியவே இருக்கேன், அன்னைக்கு நான் 10ரூபா  சம்பாரிச்சி எங்க வீட்ல குடுத்த தான் அடுத்த நாள் சோறு இருக்கும் அதே நிலைதான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு , மாற்றம் ன்னு சொல்லனும்னா பொருளாதார நிலை இன்னும் அதிகமா பிந்தங்கிபோய் இருக்கு அதன் மாற்றம்.”
“என்னோட அனுபதுல சொல்றேன் எந்த ஒரு தொழிலாளியும் உழைச்சி முன்னேறனும் நெனைச்ச அது நடக்கவே நடக்காது, இங்க இப்போ நல்ல வாளர்ந்து இருக்க பெரிய ஆளுங்கலாம் எப்படி முன்னுக்கு வந்தாங்கன்னு யாருகது தெரியுமா இல்லன தெரிஞ்சிக்க நினைக்குரோம ? ஏமாத்துனதான் வாழ்க்கைல முன்னேற முடியும் , அது தெரியாம நானும் வாழ்ந்துட்டேன் , என் பசங்களையும் வளர்த்துட்டேன், இப்போ யோசிக்குறேன் தப்புபன்னிடோமோ ன்னு”  
  • இவரின் “என் அனுபவத்துல சொல்றேன்” இந்த வார்த்தை என்னை உலுக்கியது காரணம், தனது வாழ்நாளில் பாதிக்கும்மேலான நாட்களை உழைப்பிற்கே என்று செலவழித்து அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை என்ற அவர் மன ஆதங்கத்தின் வார்த்தைகள், தொழிலாளிகள் மற்றும் உழைப்பினை பெரிதும் நம்பும் மனங்களுக்கு புரியும்.
  • இரவு பகல் என்று உழைக்கும் வர்க்க மக்களுக்கு அவர்களின் உழைப்பிற்கான ஊதியம் ( முன்னேற்றம் ) கிடைக்கவில்லை என்றால் அவர்களின் பேச்சிலே தெரிந்து விடும் அவர்களின் நம்பிக்கை நீர்த்து போய்விட்டது என.
 வடசென்னைன்னு சொன்னாலே பெரும்பாலும் ஒரு முக சுளிப்பை கொண்டு வர மக்கள் அதிகமா இருக்காங்க , உங்க பார்வை ?
“நீங்க சொல்ற இந்த பிம்பம் இப்போ ரொம்ப குறைஞ்சிடுச்சி , ஒரு 20, 30 வருஷத்துக்கு முன்ன இருந்த பேச்சி, அப்போ நெறைய ரௌடியிசம் , அடிதடி கத்தி புழக்கம் ன்னு நெறைய இருந்துச்சி, இப்போ எல்லாமே மாறிடுச்சே ! அதன் எல்ல வீட்லயும் அவங்க பசங்க படிக்குறாங்க , எல்லா JOBS லயும்  வடசென்னையில இருந்து நெறைய பேர் வேலைக்கு போறாங்க, இங்கதான் பெரும்பான்மையான பட்டதாரிகள் இருக்காங்க, LAWYERS அதிகமா இருக்காங்க DOCTORS, சின்ன சின்ன BUSINESS பண்ற முதலாளிகள் ன்னு நெறைய மாறிடுச்சி . இதலாம்  தாண்டி இன்னும் நீங்க சொல்ற மாறி முகசுளிவோட பாக்குறாங்கன அது அவங்க மன பிரச்சனை”
ஒரு நாளின் வருமானம் அன்றைய தேவைகளை பூர்த்தி செய்கிறதா ? அல்லது எதிர்கால வாழ்க்கைக்கு உதவுகிறத ?
“ ஒருநாள் வருமானம் ன்னு சொல்லுற அப்போ அது நிரந்தரமானதா இருக்காது , ஆட்டோ ஓட்டி சம்பாரிக்குறதா  வைச்சி பெருசா ஒன்னு பண்ண முடியாது , ஒரு நாள் நல்ல வருமானம் வரும் அது அன்னைக்கான தேவைகளை பூர்த்தி பண்ணிடும் ஆனா அதே வருமானம் நாளைக்கும் வருமான்னு கேட்ட கண்டிப்பா இல்ல அப்போ வாழ்க்கைக்கு தேவையானதா பூர்த்தி செய்ய முடியாம போகும் ,, இப்படியே DAILY வாழ்க்கை வெள்ளத்துல  வாழ்க்கை அடிச்சிட்டு போது”
 தன்னோட பொருளாதார நிலையினை , தனக்கு வரும் வருமானம் மூலம் பூர்த்தி செய்யவோ அல்லது முழும்மைப்படுத்தவோ இயலாமல் போகும் நிலையினை தன்னோட இயலாமையின் வெளிபடாய் ஒருவித சோர்வுற்ற உரலுடன் சொல்லும்போது, அவரின் வலியினை உணர முடிந்தது.
 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்ரிங்க இதுல வர வருமானம் எந்த அளவு பங்கினை வகிக்கிறது ? வாழ்க்கைக்கு உதவுத ?, சினிமால லாம் ஆட்டோ ஓட்டி முன்னேறலாம் சொல்றாங்களே அதோட பார்வை ?
“சினிமால காட்றது எல்லாமே உண்மை இல்லை , ஒரு சாதாரண தொழிலாளி எப்படி அப்படிதான் இதுவும் , இப்போ ஒரு கட்டுமான தொழிலாளியோ, ரீட்ச ஓட்டுபவரோ  அவங்களுக்கு தினமும் வேலையோ வருமானமோ இருக்காது அதே தான் ஆட்டோ ஒட்ற்றவங்களுக்கும் , அன்னை அன்னைக்கு கிடைக்குற வருமானத்த வைச்சிதான் குடும்பமே இருக்கு. இதுல சேர்த்து வைக்கவோ இல்லன எதிர்காலத்துக்கு எடுத்து வைக்கவோ எதுவும் முடியாது, தினமும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன், அதுனால கண்டிப்பா போயாகணும் இல்லன குடும்பம் நிலைமை என்ன ஆகிறது.”
 ( திரு. நாகராஜன் அவர்களும் நானும் சந்தித்து பேசுன நாள் தை திருநாளான பொங்கல் திருநாள், அன்னைக்கும் ஏதாது  சவாரி கிடைச்ச அவரோட குடும்பத்துக்கு மறுநாளுக்கு அந்த பணம் பயன்படும்ன்னு இன்னைக்கும் வேலைக்கு வந்தேன்னு பேசுற அப்போ சொன்னாரு )

 சமூகத்தோட வளர்சில ஒரு தனி நபர் தின கூலி தொழிலாளியான உங்க வாழ்க்கைல ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுயுள்ளதா ?? பொருளாதார ரீதியா ??
“பொருளாதார ரீதியா எந்த மாற்றமும் இல்ல தினைக்கும் சம்பாரிக்கிறது அப்போவே தீர்ந்து போறதால , பொருளாதாரம் முன்னேற சேர்த்து வைக்க வேண்டிய கட்டாயத்துல இருந்தா கூட சேர்த்து வைக்க முடியாது, அடுத்த நாள் வேலைக்கு போக வேண்டிய நிலைமைல தான் வாழ்க்கை வந்து நிக்குது, கை மீறி எல்லா தேவையும் வந்த கூட வருமானம் கைகுல்லையே இருக்கு. இந்த நிலையில மாற்றம் ன்னு எத சொல்ல?? அப்படியே மாற்றம்னு பார்த்த   சமுகாம் வளர்ச்சி அடைந்துட்டு வருது , தொழில் வளர்ச்சி எண்ண முடியாட அளவுக்கு வாளர்ந்துட்டு வருது  இது எனக்கு அடுத்த தலைமுறைக்கு முன்னேற்றமா  இருக்கும்னு எனக்கு நமபிக்கை தருது. இப்படி வேணும்னா மாற்றம்னு பார்க்கலாமே தவிர என்ன மாறி ஒரு தின தொழிலாளிகளோட வாழ்க்கைல வர வருமானத்தை வைச்சி சொத்துகளோ இல்லன சேமிப்புகளோன்னு எதையும் பண்ண முடியாது, இப்படியே தான் இந்த வடசென்னை வாசிகளோட வாழ்க்கையும் பயணிக்குது.”
( இந்த கேள்விய நான் கேட்டு அவர் பதில் சொல்லிட்டு இருக்க அப்போ திடிர்ன்னு ஒரு தின தொழிலாளி கிட்ட வந்து “நல்ல சொல்லுங்க ணா நம்பலாம் எங்க சம்பாரிச்சி சொத்துன்னு சேர்த்துவைக்க, மதியம் சாப்பாடு சாப்ட 30 ரூபா செலவு ஆய்டும் ன்னு 5ரூபாக்கு BUSCUIT  வாங்கி சாப்டுறேன். ஆனாலும் சேர்த்து வைச்சி வாழ்க்கை  மாறுன மாறி ஏதும் நடக்கல, நடக்குதான்னு பாப்போம்“ என்று பேசியபடியே அவர் சென்றார்.)
  • அடுத்த நாள் தங்கள் வீட்டில் உணவுக்கு பிரெச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் பல தின கூலிகள் தங்களில் இன்றைய உணவினை ஒதுக்கி அதில் அவரும் பணத்தை சேமிக்கிறார்கள்.
 உங்களுக்கு முன் இருந்த தலைமுறையினர்கள், உங்களுக்குனு பெருசா ஏதும் சேர்த்து வைக்கல அவங்க வர வருமானத்தை வைச்சி வாழ்க்கைய பார்த்துடாங்க, அப்படின்னு நீங்கதான் சொன்னிங்க, இப்போ உங்களுக்கு அடுத்து வர தலைமுறையினருக்கு நீங்க என்ன சென்ஜிங்க ? உங்க வாழ்க்கை அனுபவத்துல பார்த்த விஷயங்கள் அவங்களுக்கு மாற்றமா இருக்குமா ?
“எனோட அனுபவத்துல எங்க வீட்ல இருந்த சூழ்நிலையால எங்கள படிக்கவைக்க மமுடியல, முடியாது அப்போ இருந்த பொருளாதார நிலை அப்படி,எங்க அப்பா ஒரு ஆலைய தொழிலாலிய இருந்தாரு அது மூடுன அப்ரோ  குடும்பத்தோட  வறுமையின் காரணம 15 வயசுல நான் வேலைக்கு போக ஆரம்பிச்சது இன்னும் போயிட்டு இருக்கேன். என் வாழ்க்கைல நான் பட்ட கஷ்டம் எனக்கு பெரிய பாடமா  மாறிடுச்சி, அந்த கஷ்டத்தை எனோட பசங்களோ இல்லன அடுத்து வர தலைமுறைகளோ யாரும் அனுபவிக்க கூடாதுன்றதுகாக, என்கிட்ட இல்லத்தா அவங்களுக்கு தார்னும் நெனச்சேன், என்கிட்ட இல்லாதது இரண்டு. ஒன்னு சொத்து, இனொன்னு படிப்பு. சொத்து சேர்த்து வைக்குற அளவுக்கு என்கிட்டே பெரிய வசதி இல்ல ஆனா என்கிட்ட இல்லாத படிப்பு அவங்களுக்கு கிடைக்கனும்னு  என் பசங்கள படிக்க வைச்சி இருக்கேன், அந்த படிப்பு அவங்கள முன்னேற்றும்னு நினைக்குறேன்.”

இதுக்குமேல அவர்கிட்ட என்னால கேள்வி கேக்க முடியல காரணம்,  அவர்கிட்ட இல்லாத படிப்பு அவர் பசங்களுக்கு கிடைக்கணும்ன்றதுகாக   அவர் தினம் தினம் போரடுரதோட வெளிபாடு அவர் பேசுற அப்போ கண்ணுல இருந்த கண்ணீரல பிறேதிபளிச்சிது. அதோட எதிர்வினைய என் கண்ணுல இருந்தே கண்ணீர் வந்துச்சு.
 இது வடசென்னையில எங்க வாழ்க்கை இப்படி போய்டுச்சி ஆனா எங்க புள்ளைங்க வாழ்க்கை மாற்றமும் ன்னு ஒரு ஒரு  நாளும் பல போராட்டத்த சந்திக்குற அன்றாட நமப் பாக்குற பல தின தொழிலாளிகளின் கண்ணீரும், எதிர்பார்ப்புகளும்.
 பெரும் அளவில்லான தொழிலாளிகளை கொண்ட மாநகரம் ஆனா, இன்னும் வளர்ச்சி என்பது அனைவருக்கும் கிடைகள , ஆனாலும் இங்க இருக்க மக்கள் கஷ்டத்தையும் ஒரு பாகமாக எடுத்து கொண்டு, கொண்டத்துடனே பார்பதற்கு என்ன காரணம் ? ஒரு வடசென்னை வாசியாக உங்கள் பார்வை ??
“இது ஒன்னு பெரிய விஷயம் கிடையாது, இப்போ கஷ்டம்ன்னு பார்த்தாக,,  பெரும்பாலும் வடசென்னை வாசிகளுக்கு பழகி போன ஒண்ணுதான், சுமையே சுகமா மாறிபோயிடுசி,, அவங்களுக்கு கிடைக்குற பெரும்பாண்மைய வேலைகளோட சம்பளம் அன்னைக்கான தேவைகளை பூர்த்தி செய்யும், உணவு, உடை எல்லாத்துக்கும் மேல குழந்தைகள படிக்க வைக்குறாங்க. இதுவே இவங்களுக்கு ஒரு சுழற்சி முறையா மாறிடுச்சி.  இந்த மக்களோட கஷ்டத்தையோ இல்லன இவங்க வாழ்வாதாரம் முன்னேறனும்னு நெனைக்குற எதுனா ஒரு ஆரசாங்கம், செயல் மூலம் அதன் வேலைய பண்ணதான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கிடையுமே,, தவிர இங்க இருக்க மக்கள் என்னதான் உழைச்சாலும் மாறதுன்னு நான் நெனைக்குறேன்.”
 ஆட்சி அரசியல் பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது ஆனால் அது சமுக அரசியல்குள்ள வர அப்போ ஏன் சாத்தியம் இல்லாமல் போகிறது, மாநில அரசோ, ஒன்றிய அரசோ திட்டங்கள் சொல்றாங்க இந்த மக்களுக்காக ஆனலும் ஏன் இன்னும் மக்களோட நிலைமை இப்படியே இருக்கு ??
 “அரசாங்கள் திட்டங்கள் சொல்ற அப்போ மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை குடுக்குற போல தான் இருக்கு, ஆனால் அது நடைமுறைபடுத்துற அப்போ சிலருக்கு மட்டுமே பயன்யுள்ளதாக இருக்கே தவிர யாருக்காகனு சொல்றகளோ அந்த மக்கள் முழுவதுமா பயனடையுற மாறி இல்ல, அரசாங்கள் சொல்ற இலவச திட்டங்கள் மட்டும்தான் ஒட்டுமொத்த மக்களும் பயனடையுற வண்ணம் இருக்கு. அவங்கலாம் பொருளாதார ரீதியில முன்னேற அடிப்படை அம்சங்கள் என்ன தேவைன்றத அரசாங்கம் கணக்குல எடுத்துக்க மாற்றங்க,, இப்படி விட்டதலா யார் யாருக்கு  வாய்ப்புகள் இருக்கோ  அல்லது அரசியல்,  அரசாங்கத்தில் வசதி உள்ளவங்களோ இல்லன பொருளாதார ரீதியில்  வலிமை பெற்றவங்க  இவங்களே அதோட பயன்களை முழுமையா அடையுறாங்க மற்றபடி போய் சேரவேண்டிய சிறு குறு தொழிலாளிகளும் , உழைக்கும் வர்கமக்களுக்கும் போய்  சேர மாட்டுது என்பது என்னோட பார்வை . இரண்டாவது,  இந்த மாறி மக்களோட வாழ்க்கைய முன்னேற்றணும்ன்னு நெனைக்குற எந்த அரசாங்கமும் இப்போவரைக்கும் வரல ன்றது தான் என்னோட கருத்து.”
நகரத்தின் வளர்சிகாக கொண்டு வந்த மாற்றங்கள் எந்த அளவுக்கு மக்களையும் உங்களையும் பாதிச்சி இருக்கு, வாழ்வாதாரத்துல ஏதாது பாதிப்பு ஏற்பட்டதா ?
“வாழ்வாதாரத்தை பாதிக்கால  மொத்தமா வாழ்க்கையையே சிதைச்சியிருக்கு, ஆண்டு ஆண்டு காலமா ஒரு பகுதியில குறிப்பா வசிச்சி வந்த மக்களை, நகரத்தின் வளர்ச்சி வெளியே துரத்தி அடிச்சி இருக்கு ஆனா அவங்க சொன்னது, கொண்டுவர திட்டங்கள்ள வேலைவாய்ப்புகள் கிடைக்கும்ன்னு ஆனா அது பாதுகாப்பான வேலைவாய்ப்பு கிடையாது, குறுகிய கால வேலைமட்டுமே, அப்படியே வேலை செஞ்சாலும் அதுல வர வருமானமும் போதியது இல்ல,, நிரந்தரமா வேலையும் இல்லை தேவை வரைக்கும் உழைப்பை  உறிஞ்சிட்டு அப்புரோ வெளிய வீசுற வேலைகள் தான்.  இது அரசாங்கத்தோட தரவே, இங்க இருக்க மக்களுகாக அவங்க சொல்ற திட்டங்களை சரியா சென்ஜ, தற்போதைய  நிலையில வடசென்னைதான்  வாழ்க்கை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முதல் இடத்துல இருக்கும்.  அரசாங்கத்திற்கு இந்த பகுதி மக்களை பொருளாதார ரீதியா முன்னேற்றணும்ன்னு நோக்கம் இல்லை வளர்ச்சி திட்டம்ன்ற பெயர்ல  வடசென்னைவாசிகளை வெளியேற்றம் செய்கிறார்கள். எனக்கு தெரிஞ்சே B.N.C.MILL ல 17000 , 18000 பேர்கிட்ட வேலை செஞ்சத படிச்சி இருக்கேன் அங்க வேலை பார்த்தவங்கலாம்  சமூகத்துல மரியாதையோட இருந்தாங்கா, அதே மாறி மத்த கம்பெனிகளான METALBOX , M.R.F. COMPANY, TATA OIL MILL, WINCO COMPANY -களும்  அப்படிதான் இருந்துசு. (இந்த கம்பனிகள் எல்லாம் இவர் இமைக்கும் நேரத்தில் சொன்னவை) ஆனா, இப்போ அந்த கம்பெனிகள் இருந்த இடங்கள்லாம் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்கலாக மாறிடுச்சி, அங்க வேலை பார்த்த தொழிலைகளின் வாழ்வாதாரம் கேள்வி குறிதான். இதுபோலவே  மாறி குடிசை வாழ் மக்களின் வாழ்க்கை நிலைமையும் அதே இன்னல்களை சந்திக்கிறது,  MOUNT ரோடு ல  LANGS  GARDEN ரோடுனு  ஒன்னு இருக்கும் அங்க  1KM தூரத்துக்கு குடிசை வாழ் மக்கள் தான் இருந்தாங்க அவங்க வாழ்வாதாரமும் அதை சுற்றிதான் இருந்துச்சி ஆனா இப்போ  அவங்க எல்லாரையும் வெளியேற்றிட்டு தார் ரோடு போட்டு PARK  மாறி கட்டிவைச்சி இருகாங்க, அங்க இருந்த மக்களின் வாழக்கையும் வாழ்வாதாரமும் என ஆகும்ன்னு எந்த அரசாங்கமும் கவனம் செலுத்தல, அவங்கள அந்த  இடத்துல இருந்து ஒழிச்ச போதும்ன்னு இருகாங்க. சொந்த ஊரு, கிராமத்துல இருந்து  வாழ்வதற்காக சென்னை வந்து வாழ்ந்த மக்கள் இன்னைக்கு சொந்தம்ன்னு சொன்ன சென்னையிலே அகதிகளாக வாழ்றாங்க, அதுவு உள்நாட்டு அகதிகளாக வாழ்றாங்க. இதுதான் நகரத்தின் வளர்ச்சின்னு சொல்லி வடசென்னைவாசிகளின் வாழ்க்கையோட போராடுற  மாற்றம இருக்கு இன்னைக்கு.”

ஒரு உழைக்கும் வர்க சாமானியனின் அரசியல் பார்வை எப்படி இருக்க வேண்டும், எபப்டி இருந்த நீங்க சொன்ன இந்த வடசென்னை மக்களில் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார நிலை மாறும், உங்களோட அரசியல் அனுபவத்துல ?
“எனோட அனுபவத்துல  நான் தண்ணி குடிகனும்ன்னா மாநகராட்சி தண்ணிதான் குடிப்பேன், கல்வியும் அரசு பள்ளிதான் மருத்துவமும் அபப்டிதான் ஆனா இப்போ தண்ணி, கல்வி, மருத்துவம் இது எல்லாமே முழுக்க முழுக்க காச மாறிடுச்சி, இன்றைய காலகட்டதுல  எல்லாமே காசு காசுன்னு ஆனதால தான் ஒரு சாதாரண கூலி தொழிலாளி முதல் பெரும் முதலாளிவரைக்கும் பணம் மட்டுமே என்ற குறிக்கோளோட இருக்காங்களே தவிர அதுக்கு பின்னணில இருக்க அரசியலை கவனிக்க மாற்றங்க. மக்கள் கிட்ட என்ன இருந்த, மக்கள் எப்படி இருந்த எல்லாரோட வாழ்க்கையும்  சுபிச்சமா மாறும் அப்படின்ற எண்ணம் மறைக்கப்பட்டு இருக்கு, நம்பல்ல பெரும்பாண்மையானவங்க மறந்தும் போட்டோம். எனோட பார்வையில தண்ணீர், மருத்துவம், கல்வி இதலாம் எல்லாருக்கும் இலவசமா குடுத்தாங்கன, இந்த மூணுத்துக்கும் செலவு பண்ற தொகையை ஒரு சாதாரண தின கூலி சேர்த்து வைச்ச அதுவே அவங்க வாழ்க்கையில பெரும் உற்ச்சாகத்தை கொடுக்கும் ஆனா இப்படியான ஒரு அமைப்பு திட்டம் கொண்ட அரசு  இந்தியால இல்லை,, அதுனால கல்வி, பொது சுகாதாரம், இருப்பிடம் , வேலைவாய்ப்பு இதனையெல்லாம்  உத்தரவாதம் படுத்தினாதான் எல்லாரோட வாழ்க்கையும் மாற்றத்தை நோக்கி செல்லும், மத்தபடி காகிதத்தாலும், வாய்வழி வாதத்திலும், வேற்று அறிக்கையாலும் சமூகத்துல எந்த மாற்றமும் ஏற்படாது.  இப்போ இருக்க, இதுக்கு முன்ன இருந்த மாநில மற்றும் ஒன்றிய அரசாங்கம் ஏதுவ இருந்தாலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை  உயர எந்த ஒரு நடவடிக்கையும் ஏடுகள வெறும் கவர்ச்சி அரசியலும், வெட்டி விவாத அரசியலும் தான் பண்றாங்க, சாதாரண வறுமை நிலையில இருக்குற மக்களின் மீது  கவனம் செலுத்தாத அரசாங்கம் எந்த  கோட்பாடும் இல்லாத அரசியலும் அதன் விளைவான ஆட்சியையும் தான் நடக்குது. இதன் எனோட பார்வை”
  • பெரும் முதலாளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சம் பெரும் அளவு இருக்கும் உழைக்கும் மக்களின் மீதும் செலுத்தவேண்டும் என்பதே அனைத்து உழைப்பாளிகளின் உரிமை குரல் , என்பதை நானும் உரக்க பதிவி செய்கிறேன் .
தினமும் நாம் சந்திக்கும் ஒருவரை பற்றிதான் நாம், இப்பொழுது பார்த்தோம், ஏன் நம் குடும்பத்தில் ஒருவராக கூட இருக்கலாம். மக்கள் மீது நலன் கொள்ளும் அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றால் மகிழ்ச்சியே. அன்றாட வாழ்விற்காக போராடுடும் பல போராளிகள் இன்னும் இவர்கள் போல் வாழ்ந்துகொண்டே வருகிறார்கள், இவர்கள் வாழ்க்கை மேம்பட மற்றும், வாழ்வாதாரம் உயர்ந்திட, இவர்கள் சொத்துகளாக நினைக்கும் கல்வியினை தங்கள் குழந்தைகளுக்கு தருகிறார்கள், இதுவே முதற்படி மாற்றத்தை நோக்கி. உழைக்கும் வர்கத்தின் உரிமை குரல் உரக்க கேட்கும் அனைத்தும் விரைவில் சமுக சமநிலையை அடையும் .
 இவர்களின் கனவுகள் மெய் படட்டும்.
  • நா.இளமாறன்
 
  

Right Click & View Source is disabled.

error: Content is protected !!