தமிழகம்

ஓசூரில் இந்திய திருநாட்டின் 77_வது சுதந்திர தின விழா : மஜக நிர்வாகிகள் பங்கேற்பு

249views
ஓசூர் மாநகரில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்வுகளில் மஜக மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்று விடுதலை போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.  அனைத்து நிகழ்ச்சியிலும் மஜக_வின் சார்பில் உறுதி மொழி முன்மொழியப்பட்டது. மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முஹம்மத் உமர், மருத்துவரணி செயலாளர் மஹபூப் பாஷா, மாணவரணி செயலாளர் சையத், ஒன்றிய செயலாளர் பாஷா, ஊராட்சிமன்ற உறுப்பினர் முஹம்மத் அலி, இளைஞரணி செயலாளர் ஷெரீப் உட்பட மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!