தமிழகம்

உசிலம்பட்டி அருகே எழுமலையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்

66views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி வாசலில் இன்று இப்தார் நோன்பு திறப்பு விருந்து நிகழ்ச்சி ஜமாத் தலைவரும், அமமுக எழுமலை பேரூர் கழக செயலாளர் பக்ருதின் தலைமையில் நடைபெற்றது.,
இந்த நிகழ்வில் அமமுக சார்பில் மாநில தலைமை நிலைய செயலாளர் இ.மகேந்திரன், திமுக சார்பில் எழுமலை பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், அதிமுக சார்பில் விளக்கிப்பாண்டி, காங்கிரஸ் சார்பில் கணேசன், தேமுதிக சார்பில் மகாலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் நோன்பு விருந்தில் கலந்து கொண்டனர்.,
பின்னர் பேசிய அமமுக தலைமை நிலைய செயலாளர் மகேந்திரன்., கூட்டணியில் மாறுபட்டு இருந்தாலும் இஸ்லாத்திற்கு முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா என இருவரும் என்றும் உறுதுணையாக இருந்தனர்., ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது நோன்பு விருந்திற்காக தமிழகம் முழுவதும் அரிசியை வழங்கியது மட்டுமல்லாது, ஹாஷி யாத்திரைக்கு செல்ல சென்னையிலேயே அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்தார்., ஆனால் இப்போது டெல்லியில் அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு விதிமுறை விடுத்துள்ளது., ஆனால் சென்னையிலேயே மீண்டும் கொண்டு வர வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தொடர் கோரிக்கை விடுத்து வருகிறார்., மதம் கடந்து அனைத்து மதத்தினருக்கும் என்றும் அமமுக உறுதுணையாக இருக்கும் என பேசினார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!