தமிழகம்

கீழக்கரையில் உலக மனித உரிமைகள் தின விழா

119views
இராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய உலக மனித உரிமைகள் தின விழா நேற்று கீழக்கரையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவரும், மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் ஷேக் இபுறாகிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கீழக்கரை நகரில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த வெற்றியாளர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்து, மனித உரிமைகள் தினத்தின் மாண்புகள் குறித்தும் பொதுமக்கள் மனித உரிமைகள் சம்பந்தமாக பெற வேண்டிய விழிப்புணர்வு குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரும், சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரும், மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளருமான வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் அரசுத் துறைகளில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதன் தீர்வுகள் சம்பந்தமாக விளக்கவுரை பேசினார்.
இவ்விழாவில் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஹபீப் முஹம்மது தலைமை ஏற்றிருந்தார். செயலாளர் தாஜுல் அமீன் வரவேற்புரை பேசினார். சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அறிமுகவுரை நிகழ்த்தினார். கீழக்கரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன் டாக்டர். சுந்தர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் கண்காணிப்பகத்தின் அமைப்பாளர் கந்தசாமி வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் துணை தலைவர் மாணிக்கம், இணை செயலாளர் சாகுல் ஹமீது, நிர்வாகிகள் சீனி முஹம்மது சேட், ஹுசைன் அல்லா பக்ஸ் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் இணை செயலாளர் அஹமது மிர்ஷா, பொருளாளர் ஜாபிர் சுலைமான், உறுப்பினர்கள் முஹம்மது அஜிஹர், இஸ்மாயில், முஹம்மது அய்யூப்கான், ஹபீப் முஹம்மது மன்சூர், பேராசிரியர் பாசில் அக்ரம், சீனி முஹம்மது தம்பி, நஸ்ருதீன், முபீத், பரூக் மரைக்காயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.இந்த விழாவில் KEEGGI நிறுவனம் நடத்திய கருத்துப்போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிறந்த கருத்தை எழுதிய வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவினை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!