தமிழகம்

நெடுஞ்சாலைத்துறையினரால் வீடுகள் இடிக்கப்பட்டதால் வீடுகள் இன்றி சாலையில் குடியிருந்து வரும் குடும்பங்களை சந்தித்து தமிழ் புலி கட்சியினர் ஆறுதல் தெரிவித்ததோடு வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு மீண்டும் வீடு கட்டி கொடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை.

53views
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட தெ.கள்ளிப்பட்டி பகுதியில் தேனி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் வீடு கட்டி குடியிருந்து வந்தனர்.
இதனை கடந்த சில தினங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டனர்.  ஆனால் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் இரண்டு வீடுகளை மட்டும் முழுமையாக இடித்து அகற்றினர் நெடுஞ்சாலை துறையினர்.
எனவே வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டதால் அதில் குடியிருந்த இரண்டு குடும்பங்கள் தற்பொழுது வீடுகள் இன்றி நடுத்தெருவில் வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ் புலி கட்சியின் அமைப்பாளர் நாகை திருவள்ளுவன் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சாலையில் வீடுகள் இன்றி தவித்து வரும் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களிடம் நெடுஞ்சாலை துறையினர் தன்னிச்சையாக செயல்பட்டு இரண்டு வீடுகளை மட்டும் முழுமையாக இடித்து அகற்றி உள்ளதை கண்டிப்பதோடு அவர்கள் வாழ்வாதாரம் இன்றி நடுத்தெருவில் வசித்து வருவதற்கு தமிழக அரசு இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் வீடுகள் கட்டிக் கொடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதோடு அதுவரையில் பல்வேறு அமைப்புகளை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!