தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரியர் ஹோமம்

91views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரியர் ஹோமம் காலையில் துவங்கி பிற்பகல் முடிந்தது. இந்த ஹோமத்தில் 10-ம் வகுப்பு மற்றும் +2 அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். இந்த ஹோமத்தில் பேனாக்கள் வைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. அதேப்போல் இரவு திருவோணத்தை முன்னிட்டு தாயார், பெருமாளுக்கு தேன், பால்,தயிர், சந்தனம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு இரவு திருவோண தீபம் ஏற்றப்பட்டது.பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சித்தூர் பஸ் நிலையஸ்ரீபக்த ஆஞ்ச கோயில் பக்த சபா செய்து இருந்தது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!