தமிழகம்

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம்

42views
தேனி அருகே உள்ள வீரபாண்டியில் லட்சுமி பாரத நாட்டிய நடன பள்ளி, ஆனந்த பரத நாட்டிய பள்ளி இணைந்து தேவினிங் வேர்ல்ட் ரெக்கார்ட்டு பதிவு நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியினை தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் போடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாகிய ஓ பன்னீர்செல்வம் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து பரத நாட்டியத்தினை மாணவிகளுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கியும் , கின்னஸ் சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் , பதக்கங்களை வழங்கியும் சிறப்புரை நிகழ்த்தினார் .
மேலும் 5 வயது முதல் 21 வயது வரை உள்ள பாரத நாட்டிய மாணவிகள் அம்மன் வரலாற்றினை பாடி கொண்டே ஆடியும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு வாழ்க்கை முறையினை விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் 500 நடன கலைஞர்கள் 36 நிமிடத்தில் பரதநாட்டியம் ஆடிய நிகழ்வினை தேவினிங் உலக பதிவு சாதனை நிறுவனத்தின் அலுவலர் கிருத்திகா பங்கேற்று நடன நிகழ்வுகளை ஆய்வு செய்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜமின்தார் வடமலை ராஜபாண்டியன் ,லட்சுமி நாட்டியாலயா பள்ளியின் நிறுவனத்தலைவர் விஜயலட்சுமி , ஆணந்த நாட்டியாலாயாவின் நிறுவனத் தலைவர் ஐதா பேபி ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உலக சாதனை நிகழ்வு நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள் ,நடன கலைஞர்களின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிமுக நிர்வாகிகள் கௌமாரி அம்மன் திருக்கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!