தமிழகம்

மதுரையில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் கோவா ஆளுநர் கலந்து கொண்டார்

224views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாரயணகுரு சாந்தலிங்க சுவாமி ஜீவ சமாதி மடம் சார்பில் சிவகிரி தீர்த்தாடன நவதி சர்வமத கல்விச்சாலை பொன்விழா ஆண்டு மற்றும் ஸ்ரீ சாந்தலிங்க சுவாமி 92 வது குருபூஜை விழா நேற்று காலை நடைபெற்றது.
இந்த விழாவில் கனபதி ஹோமத்துடன் துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன்பிள்ளை கலந்து கொண்டார். சிவகிரி மட செயலாளர் ரிகிதம்பிரனன்ந்தா சுவாமிகள், பொருளாளர் சாரதானந்தா சுவாமிகள் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!