தமிழகம்

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமான பயனியிடமிருந்து 141 கிராம் எடையுள்ள 7 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது

167views
மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையம் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சுங்கத்துறை வான் நுண்ணறிவு அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர் .
அப்போது இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டியன் என்ற பயனிடம் இருந்து ட்ரில்லிங் மிஷின் கீ எனப்படும் கருவியில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் மற்றும் அலைன் கீ எனப்படும் நவீன ஸ்பானரில் மூன்று மறைத்து வைக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 141 கிராம் இதன் மதிப்பு 7 லட்சம் ரூபாய் என கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து மத்திய சுங்க. வான் நுண்ணறிவு பிரிவினர் கடத்தல் பயணியிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!