தமிழகம்

அரசு பள்ளிக்கு இலவசமாக கழிப்பறை கட்டிடம் அமைத்துக் கொடுக்கும் இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

332views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னா கட்டளை கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் செல்லுவதாகவும் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகும் தங்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கட்டளை இளைஞர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற கட்டளை இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில் ஐந்து புதிய கழிப்பறை கட்டிடம் கட்டு கொடுப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது தமிழக அரசு மற்றும் அந்தப் பகுதியில் இருக்கும் வார்டு மெம்பர் ஆகியோர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தங்களுடைய சொந்த செலவில் இளைஞர்கள் மாணவ மாணவிகளின் நலன் கருதி கழிப்பறை வசதி கட்டிடம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதே பொதுமக்களிடயும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!