தமிழகம்

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம்; தலைசிறந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ சேவை வழங்கல்

113views
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. கடையநல்லூர் ஐ நியூஸ் டிரஸ்ட் மற்றும் நாகர்கோவில் முத்து நீயூரோ சென்டர் இணைந்து நடத்திய இம்முகாமில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாடு, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் பரிசோதனைகளுக்கு பின் அதற்கான மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில் மருத்துவர் முத்துரெத்னம் (மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்), முத்துராஜ் (முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்), சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர் தீபக் டேவிட், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் பால் செல்வகுமார், சர்க்கரை நோய் கால்புண் சிறப்பு மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை லேப்ரோஸ்கோபி நிபுணர் தினேஷ், பல் மற்றும் முக சீரமைப்பு நிபுணர் சுப்பிரமணியன், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜூ, இதய நோய் சிகிச்சை நிபுணர் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய தலைசிறந்த மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு தேவையான மருத்துவ சேவைகள் அளித்தனர்.

இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இலவச மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஐ நியூஸ் டிரஸ்ட் தலைவர் சேக் தலைமையில், ஆலோசனைத் தலைவர் முஹம்மது மீரான், சட்ட ஆலோசகர் சாகுல் ஹமீத் ஆசாத், செயலாளர் மஞ்சிபீர், பொருளாளர் அல் அமீன் சேகனா, புதிய செல்வம், ராஜா இப்ராஹிம், அப்பாஸ், அப்துல் காதர் உள்ளிட்ட டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!