தமிழகம்

அண்ணா பல்கலை இன்ஜி. கல்லூரிகள் ஆடவர் கால்பந்து போட்டி கீழக்கரை கல்லூரி முதலிடம்

50views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான 16வது மண்டல அளவில் ஆடவர் கால்பந்து நாக் அவுட் போட்டி நடந்தது. 2 நாள் நடந்த இப்போட்டியில் காரைக்குடி கிட் அண்ட் கின், அழகப்பா செட்டியார், சிக்ரி, ராஜ ராஜன், மதுரை வேலம்மாள், தியாகராஜர், மதுரை அண்ணா பல்கலை, கேஎல்என், சோலைமலை, எம்ஏவிஎம், புதுக்கோட்டை மவுன்ட் ஜியோன், கீழக்கரை முஹமது சதக், ராமநாதபுரம் செய்யது அம்மாள், ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி என 15 பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்றன. அரையிறுதி ஆட்டத்தில் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி 2:1 என்ற கோல் கணக்கில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் புதுக்கோட்டை மவுன்ட் ஜியோன் அணி 4:2 என்ற கோல் கணக்கில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தன.
இறுதி ஆட்டத்தில் டை பிரேக் முறையில் 3:2 என்ற கோல் கணக்கில் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது. கல்லூரி முதல்வர் (பொ) செந்தில்குமார் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கினார்.
கல்லூரி திட்டமிடல் அதிகாரி திராவிடச்செல்வி, உடற்கல்வி இயக்குநர். சுரேஷ் குமார், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக செயலாளர்கள் குலசேகரபாண்டியன், சிக்கந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!