தமிழகம்

ராமநாதபுரம் பேக்கரியில் உலக கோப்பை கால்பந்து கோப்பை வடிவில் கேக்

172views
உலக கோப்பை கால்பந்து போட்டி, குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் 85 கிலோ எடையில் உலக கோப்பை கேக் வடிவமைத்து வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரி உரிமையாளர் வெங்கட்சுப்பு, இக்கேக்கை தயாரித்து கடை முன் கண்ணாடி பெட்டிக்குள் வைத்துள்ளார். விளையாட்டு ஆர்வலரான இவர், 260 முட்டை, 60 கிலோ சீனி சேர்த்து, 85 கிலோ எடையில் இந்த கோப்பை கேக்கை ஊழியர்கள் மூலம் தயாரித்துள்ளார்.
4 நாள் தயாரித்த இந்த கேக்கை, ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டபொதுமக்கள் ரசித்து செல்கின்றனர். இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேக் அருகே நின்று செல்பி எடுத்து செல்கின்றனர். பிபா உலக கோப்பை கால் பந்து போட்டி, கத்தாரில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியை உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். டிச. 18 வரை நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து விளையாட்டை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதை பிரபலப்படுத்தவும் இவ்வாறு செய்துள்ளதாக கடை உரிமையாளர் வெங்கட்சுப்பு கூறினார்.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்ற போது செஸ் போர்டு வடிவ கேக், கால்பந்து விளையாட்டு வீரர் மாரடோனா, பாரதியார், இளையராஜா, கடந்த உலக கோப்பை கிரிக்கெட் கோப்பை உள்ளிட்ட உருவங்களை ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனத்தார் ஏற்கனவே பிரம்மாண்ட கேக் போல செய்து வைத்து பலரின் வரவேற்பை பெற்றது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!