தமிழகம்

சிவகாசி அரசுப்பள்ளியில், சர்வதேச உணவு தின விழா சிறப்பு கருத்தரங்கம்

52views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஏவிடி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பில் சர்வதேச உணவு தின விழா சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், பொருளாளர் பாலமுருகன், மாவட்ட மகளிரணி தலைவி ஈஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றனர். சர்வதேச உணவு தின விழா சிறப்பு கருத்தரங்கத்தை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா துவக்கி வைத்து பேசினர்.
மேயர் சங்கீதா இன்பம் பேசும்போது, இயற்கை உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதை விட்டுவிட்டு சிறுதானிய வகைகள், நவ தானிய வகைகள், முளை கட்டிய பயறு வகைகளையும் சாப்பிட வேண்டும். சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் சுகாதாரமற்ற பண்டங்களை சாப்பிடக்கூடாது. மேலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் வண்ணம் கூட்டப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் நலனுக்காக சத்தான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சமைத்து தருகின்றனர். ஆனால் இன்றைய குழந்தைகள் காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். தினமும் உணவில் காய்கறி, கீரை, முட்டை வகைகள் சேர்க்க வேண்டும். அப்போது தான் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் தங்களது வீடுகளில் இருந்து தயாரித்த இயற்கை உணவுகளை கண்காட்சியாக வைத்து, அதன் பயன்கள் குறித்து விளக்கமளித்தனர். பள்ளியின் தமிழ் ஆசிரியர் கனகபுஷ்பம் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!