தமிழகம்

நடு முதலைக்குளம் கண்மாயில் இளைஞர்கள் சார்பில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது

258views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடு முதலைக்குளம் கண்மாயில் வருடம் வருடம் மீன்பிடித் திருவிழா நடைபெறும். நடு முதலை குளம் இளைஞர்கள் சார்பாக 6000 மீன் குஞ்சுகள் நேர்த்திக்கடன் ஆக கண்மாயில் விடப்பட்டது .இது காமாட்சி அம்மன் கருப்பசாமி கண்மாய் என அழைக்கப்பட்டு வருடம் ஒரு முறை மீன் பிடி திருவிழா கொண்டாடப்பட்டு மீன்களைப் பிடித்து அதை சாப்பிட்டால் எந்த ஒரு நோயும் நொடியும் இல்லாமல் நலமுடன் இருக்கலாம் என்பது இந்த கிராம மக்களின் ஐதீகம். இதில் ஏராளமான இளைஞர்கள் நேர்த்திக்கடனாக மீன் குஞ்சுகள் வாங்கி காமாட்சி அம்மன் கருப்பசாமி கண்மாயில் விட்டனர் இதில் ஏராளமான இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!