தமிழகம்

தெருக்குழாய்களில் கழிவு நீர் கலந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பெண்கள் சாலை மறியல்; மாநகரின் முக்கிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

75views
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள பூக்கார தெருவில் உள்ள குடிநீர் தெருக்குழாய்களில் கழிவு நீர் கலந்து, துர்நாற்றத்துடன் தண்ணீர் வருவதால் தொற்றுபரவும் அபாயம் இருப்பதாக பலமுறை புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்கள் தங்கள் பகுதிக்கு முறையான சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும் வரை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!