தமிழகம்

பொது மக்கள் எதிர்ப்பை தாண்டி பெரியகுளத்தில் மதுபான கடை திறப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, மஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம்

168views
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு இடையூறாக மது பான கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றது, கடையை திறக்க அனுமதி கொடுக்க கூடாது என இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கடந்த 22 ம்தேதி காவல்துறை DSP அவர்கள் இடத்தில் மனு அளித்தார்கள்.
கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளிக்க பட்ட நிலையில் இன்று மதுபான கடை திடிரென திறக்க பட்டது இதனால் அந்த பகுதியில் பொது மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தார்கள்.
உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அஜ்மீர் காஜா,
எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஜாவித் மற்றும் நிர்வாகிகள் மஜக நிர்வாகிகள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் இடத்தில் முறையிட்டனர்.

ஆனால் கடை திறந்து மதுபான விற்பனை நடந்து கொண்டே இருந்த நிலையில் பொது மக்கள் நலனை பார்க்காமல், பொது மக்களுக்கு மிக பெரிய இடையூறாக உள்ள மது பான கடையை அனுமதி கொடுத்த மாவட்ட நிர்வாகம் அலட்சியத்தை கண்டித்து பொதுமக்கள் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ, முஸ்லிம் லீக், மஜக,மற்றும் பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கடையை முற்றுகையிட்டனர். அதற்கு பின்னரும் கடையில் மது பான விற்பனை தொடர்ந்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை அடுத்து கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மது பான கடையும், மூன்றாந்தல் பகுதியில் உள்ள மதுபான பாரையும் உடனே மாவட்ட நிர்வாகம் மூடா விட்டால் மிக பெரிய போராட்டம் நடத்த படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.உடனடியாக போலீஸ்க்கு தகவல் கிடைத்தவுடன் பெரியகுளம் உட்கோட்டகாவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவக்குமார் சார் ஆய்வாளர் மகேஸ்வரி லதா பயிற்சி சார்ப்புஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள்பாதுகாப்பில்ஈடுபட்டனர் துணைக் கண்காணிப்பாளர் கீதா அவர்கள் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிலும் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல்ஈடுபட்டவர்கள் அனைவரும்கலைந்து சென்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!