தமிழகம்

கழிவு நீர் கலப்பதால், தொற்று நோய்

127views
சோழவந்தான் அருகே தேங்கிய மழை நீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி.ஒன்றியம் வடகாடுபட்டி பெரியார் நகரில் கடந்த 10 நாட்களாக மழை நீர் வெளியேறாமல் தேங்கி கிடப்பதால் , மழை நீரில் அந்த பகுதி கழிவு நீர் கலந்து தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோரிடத்தில் முறையிட்டும் ,இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதாகவும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் , மழை நீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் வீட்டிற்கு குடி இருக்க முடியாமல் தவிப்பதாகவும் ஆகையால், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையரை நேரில் பார்வையிட வலியுறுத்துமாறும், மேலும் ,மழை நீரை உடனடியாக வெளியேற்றி தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!