தமிழகம்

வாலிநோக்கம் உப்பு நிறுவனத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

178views
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,  தென் மாவட்டத்தில் பிரதான தொழிலாக தமிழக அரசின் நேரடி நிர்வாகம் மூலம் வாலிநோக்கத்தில் 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு உப்பு நிறுவனம் தொடங்கப்பட்டு வணிக ரீதியாக 1978 ஆம் ஆண்டு முதல் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 5,236 ஏக்கர் நிலம் பரப்பில் செயல்படுகிறது. 1,500 க்கும் மேற்பட்ட பருவகால தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜன முதல் அக். வரை இங்கு உப்பு தயாரிக்கப்படுகிறது. அயோடின் கலந்த கல் உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு ஆகியவற்றை நெய்தல் உப்பு என்ற வணிக பெயரில் வெளிச்சந்தையில் உற்பத்தி செய்திட முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து உள்ளார். இதுவரை 25 டன் நெய்தல் உப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளஅயோடின் செறிவூட்டிய உப்பு, இரு வித செறிவூட்டிய உப்பை பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சத்துணவு திட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களுக்கு இரும்பு சத்து கலந்த இரு வித செறிவூட்டிய உப்பு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் அருகே 3 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் மூலம் கள ஆய்வு செய்து இப்பகுதியில் உப்பு உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கவும், உப்பு நிறுவன உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு உப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜாமணி, கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நவாஸ் கனி எம்பி, முருகேசன் எம்எல்ஏ , மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தனி அலுவலர் தில்லிகுமார், திட்ட மேலாளர் விஜயன், துணை மேலாளர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், முத்துச்செல்வன் உடனிருந்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!