தமிழகம்

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு

50views
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் 13-வது மாநிலதேர்தல் நடைபெற்றது.  இதில் மாநில பொதுச்செயலாளராக 9 -வது முறையாக சி.சேகர் தேர்வு செய்யப்பட்டார்.
மாநில தலைவராக டி.ரமேஷ்பாபு, பொருளராக வி.முருகன் மற்றும் அனைத்து புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.  சங்கத்தின் தேர்தல் ஆணையாளர்களாக கே.ஜெயராமன், டி.கே.புரந்தன், கே.செல்வராசு , டி.பாண்டியன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!