தமிழகம்

பாதுகாக்கப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட நபர்கள் கைது

210views
அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில். மதுரை திருப்பரங்குன்றம் சன்னதி தெரு தேங்காய் பழம் வியாபாரிகள் சங்க பொது கல்யாண மண்டபம் முன்பு அரை கிலோமீட்டர் கிழக்குப் பகுதியில் ட்ரோன் கேமரா ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அப்பொழுது ரோந்து பணியில் இருந்த தனிப்படை போலீசார் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட நபர்கள் விசாரித்த பொழுது புது அனுப்பானடியை சேர்ந்த சுரேஷ்குமார். பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த நரேந்திர குமார். அனுப்பானடியை சேர்ந்த பிரசாந்த். ஆகியோர் புகைப்பட கலைஞராக உள்ளார்கள்.  மூன்று நபர்களுடன் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கண்ட பொழுது
டாக்குமென்டரி படம் எடுத்து வருவதாகவும் இதற்காக ட்ரோன் கேமராவை பறக்க விட்டதாகவும். தெரிவித்தனர்,
எந்தவித அரசின் முன் அனுமதி இல்லாமல் பாதுகாப்பான பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்க செய்தது தெரியவந்தது. இதனை எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியில்.
விபத்து ஏற்படுத்தும் விதத்தில் பறக்கவிட்ட ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்து திருப்பரங்குன்றம் காவல் நிலையம் அழைத்து சென்று மூன்று நபர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!