தமிழகம்

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து வெண்மை நிறத்தில் நுரை நுரையாக வருவதால் விவசாயிகள் அச்சம். மேலும் ஆகாயத்தாமரைகள் நிறைந்து காணப்படுகிறது

74views
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது அந்த வகையில் மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண்மாய் வெள்ளக்கல் பகுதியில் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழை நீரோடு கலந்து மாசடைந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக பாசன கண்மாயில் கலப்பதால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
நீர்நிலைகளை தூய்மைபடுத்தாமல் ஆகாயத்தாமரைகள் நிறைந்து மீன்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும்.
மேலும் கண்மாயில் இருந்து நுரை பொங்கி ரோட்டை மறைக்கும் அளவுக்கு உள்ளது.
காற்று அடித்தால் நுரை காற்றில பறந்து ரோட்டில் செல்லும பாதசாரிகள், வாகன ஒட்டிகள் மீது படுவதால் விபத்து ஏற்படும் சூழ் நிலை உள்ளது.

செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!