தமிழகம்

சின்னமனூர் ஒன்றியம் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

34views
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.03-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் நவ.14-ம் தேதி முதல் டிச.03-ம் தேதி வரை பள்ளிகளில் பல்வேறு விதமான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நவ.14-ம் தேதி அனைத்து தொடக்க நிலை, நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நவ.16-ல் விழிப்புணர்வு பேரணி வட்டாரத்திற்கு 2 குறுவள மையத்திலுள்ள 1 மேல்நிலை மற்றும் 1 உயர் நிலை பள்ளியில் நடைபெற்றது.
ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தேனி மாவட்ட உதவி மாவட்ட திட்ட அலுவலர் திரு.மோகன் தலைமையாசிரியர் இராமகிருஷ்ணன் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ச.சகாயராஜ் ஆசிரிய பயிற்றுநர் லுக்கா,  சிறப்பாசிரியர் ரேகா, இயன்முறை மருத்துவர் அசோக்குமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் முக்கியத்துவம் குறித்து திரு.மோகன் சிறப்புரையாற்றினார்.
சின்னமனூர் நகராட்சி காலனி உயர்நிலைப் பள்ளியில் உதவி தலைமையாசிரியர் திவாகர் ஆசிரிய பயிற்றுநர்கள் சாமுண்டீஸ்வரன், பாக்கிய மரியானா நான்சி, சிறப்பாசிரியர்கள் தனம்,குமார், தாமரைச்செல்வி மற்றும் தொண்டு நிறுவன பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பேரணியை முன்னின்று நடத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் மாணாக்கர்களை ஊக்குவிக்கும் வகைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை மாணாக்கர்கள் பேரணியின் போது உரக்க கரகோஷத்துடன் முழங்கினர்.
அனைத்து மாற்றுத்திறனாளி மாணாக்கர்களையும் சமமாக மதித்து பள்ளியில் சேர்த்திடவும் அரசு வழங்கும் அனைத்து உதவி திட்டங்களை பெற்று மாற்றுத்திறனாளி பயனடைய வேண்டும் என்பதே இப்பேரணியின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்றது.
பேரணியில் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அலுவலகப் பணியாளர்கள் சதீஸ்பாபு, கார்த்தி பகல் நேர காப்பகம் வினோதினி, உதவியாளர் கலைச்செல்வி ஆகியோர் சிறப்பாக நடைபெற்ற இப்பேரணிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.
பேரணியில் பங்கு கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இப்பேரணி நிகழ்வுகளானது தேனி மாவட்ட அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : A. சாதிக் பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!