தமிழகம்

சோழவந்தான் மற்றும் தென்கரையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்

275views
கார்த்திகை ஒன்றாம் தேதி பிறந்ததை தொடர்ந்து சபரிமலை செல்வதற்காக தமிழகம் எங்கும் ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்கள் விரதத்தை தொடங்குவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் தென்கரையில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்காக தங்கள் குருநாதர் மூலம் மாலை போட்டு விரதத்தை தொடங்கினார் 48 நாள் மண்டல பூஜை மற்றும் மகரஜோதி விழாவை காண்பதற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்கள் விரதத்தை தொடங்கினார்கள்,
இன்று அதிகாலை முதலே தென்கரை ஐயப்பன் கோவில் மற்றும் சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தங்களின் குருநாதர் மூலம் மாலை போட்டு விரதத்தை தொடங்கினர் புதிதாக கன்னி சாமிகளும் முதல் முறையாக ஐயப்பன் கோவில் செல்வதற்காக உற்சாகத்துடன் மாலை போட்டு விரதத்தை தொடங்கியதாக தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று வரும் குருநாதர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!