தமிழகம்

தேவர் குருபூஜைக்கு மக்கள் சென்று வர தனி வழி., முக்கிய பிரமுகர் செல்வதற்கு தனி வழி. மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

160views
சென்னை செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பசும்பொன் தேவர் ஜெயந்தி முன்னேற்பாடுகள் குறித்த கேள்விக்கு.?
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குள் வருவதால் ஏற்பாடுகள் அனைத்தும் சீராக நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் திமுக கழகத்தினுடைய தோழர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
தேவரின் தங்க கவசம் அதிமுக தரப்பினராக உள்ளார்கள் என்பது குறித்த கேள்விக்கு.?
தேவரின் தங்க கவசம் குறித்த வழக்கு வருகின்ற 26 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் உள்ளது நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கிறதோ அதன்படி நடந்து கொள்வார்கள் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவின் படி செயல்படும்.
தேவர் ஜெயந்தி முன்னிட்டு வாகன அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் நிகழ்வது குறித்த கேள்விக்கு.?
அந்தந்த கிராமங்களில் இருந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது., தேவர் குருபூஜைக்கு மக்கள் சென்று வர தனி வழி., முக்கிய பிரமுகர் செல்வதற்கு தனி வழி., என்று எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டபங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்ப்பதற்கும்., வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எந்தவித குறைபாடும் இருக்காது தமிழக முதல்வர் மற்றும் சமுதாயத் தலைவர்களை மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் வந்த செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு.?
முதல்வர் சுற்றுப்பயணம் விவரம் இன்னும் வரவில்லை சுற்றுப்பயணம் அறிக்கை வந்தவுடன் தேவர் ஜெயந்திக்கு முதல்வர் வருகை தெரியும்.
பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகிறது என்று துறை அமைச்சர்கள் கூறுகிறார்கள் ஆனால் பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு.?_
துறை சார்ந்த அமைச்சர்களிடம் தான் இந்த கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!