தமிழகம்

மதுரையில் வீரநாராயணன் ஏரி (எ) நிலையூர் கண்மாயில் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கண்மாய் நிரம்பும் பொழுது வீடுகள் நீரில் மூழ்கும் அவலம்

130views
தமிழகத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான வீரநாராயணன் என்கின்ற நிலையூர் கண்மாய் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நிலையூர் மற்றும் கூத்தியார்குண்டு பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த கண்மாய்யானது பெரிய கழுங்கு மற்றும் சின்ன கழுங்கு என இரண்டு கழுங்குகள் கொண்டவை.
இக்கம்மாய் 742 ஏக்கர் பரப்பளவும்., 27 அடி உயர ஆழம் கொள்ளளவு கொண்டவை. சாத்தனூர் அணையை விட ஏழு மடங்கு பெரிய கண்மாக கருதப்படும் இக்கண்மாய் தற்போது வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரினால் 412 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. இக்கம்மாய நம்பி 25-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாசன வசதி பெறுகின்றனர்.
3000 ஏக்கர் பரப்பளவில் விவாசயம் செய்து வந்த நிலையில்., தற்போது கண்மாய் ஆக்கிரமிப்பு மற்றும் நீர் பிடிப்பு பட்டாக்கள் பெற்றுக்கொண்டு வீடுகட்டி பொதுமக்கள் குடியிருந்து வருவதால் இப்போது 1712 ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி கொண்ட கண்மாயாகவும்., இதனை நம்பி பெரிய ஆலங்குளம்., ஒ.ஆலங்குளம்., கொம்பாடி., சூரக்குளம்., எலியார்பத்தி., பெருங்குடி உள்ளிட்ட 25 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள ஊர்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் மலைப்பொழிவு அதிகமானால் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது சோழவந்தான் வழியாக நிலையூர் கால்வாய் மூலம் நிலையூர் கண்மாய்க்கு நீர் திறந்து விடப்படுகிறது. 742 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயாக இருந்த நிலையூர் கண்மாய் தற்போது கண்மாய்க்குள் அதிகம் வீடு கட்டி வருவதால் கண்மாயின் பரப்பளவு 400 ஏக்கர் பரப்பளவாக குறைந்து கொண்டே வருகிறது.
கடல் போல் காட்சியளிக்கும் இந்த நிலையூர் கண்மாயில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பட்டா பெற்றுக் கொண்டு கண்மாய்க்குள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வீடுகள் கட்டி தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு மழைக்காலங்களிலும் நிலையூர் கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடும் போது இப்பகுதி வாசிகள் தங்களது வீட்டை காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு செல்வதும்., கம்மாய் தண்ணீர் வற்றிய பிறகு மீண்டும் தங்களது குடியிருப்புக்குள் வருவதும் தொடர்கதையாக உள்ளது.
மதுரையில் இந்த கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளான தனக்கன்குளம்., இந்திரா காலனி., சூறாவளி மேடு., மற்றும் திருமங்கலம் செல்லும் ஜிஎஸ்டி சாலையை சுற்றியுள்ள தெருக்கள் வரை தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மேலும்., தற்போது வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது நிலையூர் கண்மாய்க்கு முழுமையாக தண்ணீர் திறந்து விடாமல் இருப்பதற்கு இப்பகுதியில் மேலும்., குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால். தற்போது., கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள சின்ன கழுங்கு நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!