தமிழகம்

உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்.

133views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாநில தலைவர்டாக்டர் பால்பர்ணபாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி பண்ணைப்பட்டி பிரிவு ஈஸ்வரி காம்ப்ளக்ஸ் மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  1.தே.கல்லுப்பட்டி பேருந்து பணிமனையிலிருந்து ஏ கிருஷ்ணாபுரம் பேருந்து வசதி ஏற்ப்படுத்தி கொடுக்கவும் 2 அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து திறந்தவெளியில் வைத்து மழைகாலங்களில் நனைந்துவிடுகின்றன.
மக்கிபோன அரிசியாக ரேசன்கடைகளில் வருவதால் பாதுகாப்பான நெல் குடோன் அமைக்க கேட்டுக்கொண்டுள்ளது.  3 மாவட்டம் முலுவதும் கண்மாய்களில் சீமைகருவேலமுள்மரங்களை அகற்ற அரசு அரசாணை பிறப்பித்தும் வனத்துறையினர். முள் மரங்களை அகற்ற விடுவதில்லை எனவே அனைத்து கண்மாய்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென கேட்டுகொள்கிறது. மற்றும் பலதீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன இந்த கூட்டத்தில் மாவட்ட துணை தலைவராக இருந்துவந்த திரு ஓ.லட்சுமணன் அவர்களின் இறப்பிற்கு திருஉருவபடத்தை வைத்து மலர்தூவி அனைத்து உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
புதிய மாவட்ட துணை தலைவராக மு.ஜெகதீசன் அவர்களை தேர்வுசெய்தனார். இதில் சிறப்பு அழைப்பாளராக நாகை மாவட்டதலைவர் சிவகுமார் நாகை மகளிரணி செண்பகவள்ளி கலந்துகொண்டனர். இதில் மதுரை மாவட்டநிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் சின்னகொடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வி மதிவாணன் சித்தன் எம்கல்லுப்பட்டி முருகேசன் சேடபட்டி ரத்தினம் லோகு சுருளிவேல் வினோத் தர்மலிங்கம் மகளிரணி சரஸ்வதி ஈஸ்வரி ஜெயப்பிரியா ஜெயந்தி பெருமாயி விரபுத்திரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!