தமிழகம்

பெரியகுளம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 3 தனியார் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு கட்சி சார்பாக போராட்டம்

39views
தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணைசாலைஉள்ள மீனாட்சிபார்பல வருடங்களாக உள்ளது காந்தி சிலை மற்றும் தேனி சாலை பகுதியில் 3 தனியார் மதுபான கடை இயங்கி வருவதால் இந்த கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி தனியார் மதுபான கடையை மூட வலியுறுத்தி மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாலும் அதை கண்டிக்கும் விதமாக இன்று பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே விசிக, மதிமுக, தமுமுக, CPI, CPI (M), SPDI, இஸ்லாமியர் கூட்டமைப்பு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிபோன்ற கட்சி சார்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது மூன்று தனியார் மதுபானம் கடை இயங்கி வரும் பிரதான சாலையாக உள்ளதாகவும் வழியாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் வாகனங்கள் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் வழிபாடு தளங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் செல்ல இருப்பதாலும் மதுபான கடை அப்பகுதியில் இயங்கும் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாலும் உடனடியாக மூன்றும் மதுபான கடையையும் மூட வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் .

மேலும் புதிய பேருந்து நிலையம் எதிரில் புதிதாக தனியார் மதுபான கடை திறக்கப்பட உள்ளதால் அப்பகுதியில் மதுபான கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கையை வைத்தனர் இந்த தர்ணா போராட்டத்தில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!