தமிழகம்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

128views
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் தெற்கு கிளை கழகம் சார்பாக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கிளைச் செயலாளர் ராஜபாண்டி தலைமை வகித்தார். துணைச் செயலாளர் அழகுமலை, பால் முதலியார், ஜானகிராமன், காமாட்சி, முத்துப்பாண்டி, நாகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர். இதேபோல் மன்னாடி மங்கலம் வடக்கு கிளைக் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது இதில் வடக்கு கிளைக் கழகச் செயலாளர் கன்னையா கல்லாங்காடு செயலாளர் ராமு நிர்வாகிகள்.மயில் மாயன் உள்பட பலகலந்து கொண்டணர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!