தமிழகம்

சோழவந்தான் அருகே சாலை பணியினை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர்.காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

121views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு சிவநாதபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி வழியாக செல்லும் சாலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திடீரென்று நேற்று இரவு மர்ம நபர்கள் 50 பேர் கொண்ட கும்பல் காலை பணிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தள்ளியதாகவும் ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலையை, பெயர்த்து எடுத்ததாகவும் கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சோழவந்தான் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையை சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சோழவந்தான் காவல் ஆய்வாளரிடம் முறையிட்டனர் இதனை கேட்ட ஆய்வாளர் முறையாக புகார் அளிக்காமல் இவ்வாறு கிராமத்தினர் வந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகையால் உடனே புகார் கடிதம் எழுதி கொடுத்து விட்டு செல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று அறுவர்த்தியதன் பேரில் கிராமத்தின் சார்பாக சோழவந்தான் காவல் ஆய்வாளிடம் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் புகாரின் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் கிராமத்தினர் கலைந்து சென்றனர் இன்று காலை சோழவந்தான் காவல் நிலையத்தில் திடீரென ஒரே கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!