தமிழகம்

தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பாதாள சாக்கடை திட்டம்

51views
தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பாதாள சாக்கடை திட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி முதல் நிலை பேரூராட்சியாகும் பேரூராட்சி மொத்த பரப்பளவு 28 சதுர கிலோமீட்டர் பேரூராட்சியின் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை 15 ஆயிரத்து 625 ஆகும் பேரூராட்சியில் உள்ள மொத்த வார்டுகள் 15 ஆகும் இப்ப பேரூராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு அரசாணை எண் 442 நாள் 04. 11. 2019 மூலம் 41 கோடியே 7 ஆயிரத்து 237 ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு தொழில்நுட்ப ஒப்புதல் 41 கோடிக்கு தலைமை பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மதுரை நா கா எண் 19 2019 மூலம் வழங்கப்பட்டு இத்திட்டத்திற்கான நிதி மூலதன மானிய நிதியின் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இப்ப பேரூராட்சியின் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் நோக்கத்தில் போடிநாயக்கனூர் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பொழுது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி வீடுகளில் இருந்து பெறப்படும் கழிவு நீர் நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு நூறு லிட்டர் என்ற அளவில் கணக்கிடப்பட்டு போடிநாயக்கனூர் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்படுவதாக திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளது கழிவுநீர் சேகரித்தல் பணிக்காக 1373 உள் நுழைவு தொட்டிகள் கட்டுதல் 33 ஆயிரத்து 533 மீட்டர் நீளம் கழிவு நீர் குழாய்கள் பதித்த 4500 கழிவுநீர் வீட்டு இணைப்புகள் அமைக்கப்பட்டு இத்திட்டத்தில் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி ஒரே பகுதியாக கணக்கிட்டு கீழ சுக்கநாதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குந்து நிலையத்தில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு பின் 4950 மீட்டர் நீளமுள்ள 300 மில்லி மீட்டர் விட்டம் உள்ள குழாய் மூலம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது இத்திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் 1.90 எம்.எல்டி (இடைநிலை ஆண்டு 2037 )கழிவு நீர் போடிநாயக்கனூர் நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைத்து சுத்திகரிப்பு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கட்ட திட்டம் செயல்படுத்த போடிநாயக்கனூர் நகராட்சி தீர்மானம் எண் 212 நாள் 31 7 2013 மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது தற்சமயம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பராமரிப்பு பணிக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளது பேரூராட்சி மூலம் அனைத்து பகுதிகளிலும் வீட்டுக் கழிவுநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் இன்று தேனி மாவட்ட குடிநீர் வடிகால் வாரியம் SE விஸ்வலிங்கம் தலைமையில் E. E,ராமச்சந்திரன் முன்னிலையில் AWE மனோகரன் மற்றும் AE. செல்வி. இவர்களுடன் மேல சொக்கநாதன் பேரூராட்சி தலைவர் கண்ணன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கி வைத்தனர் இதில் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!