தமிழகம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் எதிர்ப்பு நாள் முன்னிட்டு பாலியல் சீண்டலில் இருந்து தப்புவது எப்படி?’ புதுவிதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை கீரைத்துறை காவல் நிலையத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

240views
மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவிகளை காவல் நிலையம் அழைத்து வந்து புதுவித முயற்சியை மேற்கொண்டது மதுரை, கீரைத்துறை காவல் நிலையம்.
இன்று காலை ‘பள்ளி மாணவ மாணவிகள் பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?’ என்பது தொடர்பாக பேச்சு போட்டி, கவிதை கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சென்மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏபிடி துரைராஜ் நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாளையம்பட்டி முத்துச்சாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவிகளை காவல் நிலையம் வரவழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாலியல் சீண்டல் செய்தால் மாணவிகள் என்ன செய்ய வேண்டும், எதிர்கொள்வது குறித்து காவல் ஆய்வாளர் பெத்துராஜ் எடுத்து கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர் சந்தான போஸ் பெண் சார்பு ஆய்வாளர் ஆனந்த வள்ளி
சார்பு ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பேச்சு மற்றும் கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதலிடம் பெற்ற 3 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதோடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் பென்சில், பேனா மற்றும் நோட்டு புத்தகங்கள் கீரைத்துறை காவல் நிலைய காவலர்கள் சார்பில் வழங்கினர். மாணவிகளிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசிய மாணவ மாணவிக்கு பரிசும் வழங்கினர்.

மாணவிகளை காவல் நிலையம் அரைத்து வந்து போட்டிகள் நடத்தியதுடன் அனைவரிடத்தில் மாணவிகளை பேச வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுவித முயற்சியினை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!