தமிழகம்

நாடு நம் வீடு

102views
இன்றைய உலகத்தில் நாடு நம்வீடு அழகான ஓரு திட்டத்தை முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் P. ஜோதிமணி தலைமையிலும் சென்னை அண்ணா பல்கழைக்கழக துணைவேந்தர் திரு. வேல்ராஜ் அவர்களின் முன்னிலையிலும் சுவாமி ஞானனந்தா அவர்கள் ஜோதி இமையம் அவர்களின் ஆசியுடன் சென்னை அண்ணா பல்கழைக்கழகத்தில் 29/12/2023 மாலை 5 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்தில் திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டம் தமிழகத்திலுள்ள நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் ஓவ்வொரு தலைவர்கள் நியமிக்கப்பட்டு அந்தக் குழுவில் தமிழகம்,இந்தியா முழுவதுமாக வரும் 2030 ம் ஆண்டுக்குள் பசுமை எதிலும் பசுமை,சுத்தமே சுகாதாரம்,சுகாதாரமே நல்லொழுக்கம் என்ற பத்து அம்சங்கள் கொண்ட திட்டத்தை நிறைவேற்றி துவக்கி வைத்துள்ளார்கள்.

அதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் இந்திய அரசு செயலாளர் திரு.மஞ்சேந்திரா நாதன் IAS, பட்டேல் Training Academy கல்லூரி இயக்குனர் AS. ராஜன் IPS, முன்னாள் தமிழக அரசு செயலாளர் திரு. சந்தானம் அவர்கள், முன்னாள் காவல்துறை தலைவர் திரு. பெரியய்யா அவர்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர் எழுத்தாளர் திரு.M. R.செளந்தரராஜன் அவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஓருங்கிணைப்பாளர் முன்னிலை வகித்து செயல்பட்ட திரு. போஸ் அவர்கள்(இயக்குனர், சங்காரா பவுண்டேஷன், கோவை), சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் திரு. சீயோல் அவர்கள், இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கி எல்லோரையும் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை பல்கழைக்கழக பதிவாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பஞ்சாயத்து நகராட்சி தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று அச்சாணியாக செயல்பட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்போடு வருங்கால தமிழகம் வருங்கால இந்தியா சுத்தம், எங்கும் பசுமை, எதிலும் பசுமை என்ற உயர்ந்த நோக்கத்தோடு நாடு நம் வீடு திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் அனைத்து மக்களின் ஆதரவோடு செயல்பட உள்ளது. விரைவில் மண்டலவாரியாக துவக்க விழா செயல்பட உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!