தமிழகம்

திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு சேச்சி கேட்சிங் திருப்பூர் மாவட்டத்தில் வாகனத்தை திருடியவர் மதுரையில் மாட்டினார்

292views
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபிலன் இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளது நேற்று முன்தினம் இரவு அதிகாலை திருப்பூர் இருசக்கர வாகனத்தை திருடிய உள்ளான் வாகனத்தின் உரிமையாளர் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். திருடப்பட்ட வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு உள்ளது  என  போலீசாரிடம் தெரிவித்தார். அதிகமாக செயல்பட தொடங்கிய திருப்பூர் போலீசார் வண்டி மதுரை நோக்கி செல்வதாக தெரியவந்தது உடனடியாக மதுரை போலீசாருக்எனகு உஷார் படுத்தினர் நேற்று அதிகாலை நேரம் மண்டேலா நகர் ரிங் ரோடு போக்குவரத்து போலீசார் கபிலினை பிடிக்க முயன்றனர். எனினும் அவன் டூவீலரை காவல்துறையின் மீது மோதுவது போல் வந்து போக்கு காட்டி தப்பித்து சென்றான்.  உடனடியாக வயர்லெஸ் மூலமாக வேலம்மாள் கல்லூரி சிந்தாமணி ரிங் ரோடு சிக்னல் சந்திப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சிக்னல் ஆம்புலன்ஸ்காக செல்வதற்கான சிக்னலை பயன்படுத்தி பிரத்தேக பாதையில் போலீசார் கபிலனை பிடிக்க தயாராக இருந்தனர். அடுத்தடுத்து நிற்காமல் முன்னேறி செல்ல முயல முடியவில்லை. அவனால் வேறு வழி இன்றி ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் வந்த அவனைப் பிடிக்க முயன்ற போது தப்பிக்க முயன்ற போது கீழே விழுந்தார். உடனடியாக கைது செய்த போலீசார் அவனிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

திரைப்படத்தை மிஞ்சும் வகையில் திருப்பூரில் இருந்து மதுரை வரை இருசக்கர வாகன திருடனை விரட்டிப் பிடித்த மதுரை போலீசாருக்கு மதுரை மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் கூடுதல் கமிஷனர் ஆறுமுகசாமி மற்றும் திருமலை குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி.காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!