விளையாட்டு

விளையாட்டு

CSKவிலிருந்து விலகியதை உறுதி செய்த ஜடேஜா? – இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சி பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக சி.எஸ்.கே வீரர் ரவீந்திர ஜடேஜா மனக்கசப்பில் இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. அத்தொடரிலிருந்து அவர் பாதியிலேயே வெளியேறியதற்கான காரணமும் அதுதான் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அவ்வணியின் கேப்டனான தோனியின் பிறந்த நாள் அண்மையில் வந்தது. பலரும் அவருக்கு வாழ்த்துச்சொன்ன நிலையில் ஜடேஜா மட்டும் அதில் மிஸ்ஸிங். வழக்கமாக முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லும் ஜடேஜா இம்முறை தோனியைக் கண்டுகொள்ளாதது பலருக்கும்...
விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் மைராஜ் அகமது கான் தங்கம் வென்று வரலாற்று சாதனை

துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்துவருகிறது. ஆடவர் ஸ்கீட் பிரிவின் ஃபைனலில் இந்தியாவை சேர்ந்த மைராஜ் அகமது கான் அபாரமாக விளையாடினார். 46 வயதான இந்தியாவின் மைராஜ் அகமது கான், 40 ஷாட்கள் கொண்ட ஃபைனலில் 37 முறை மிகச்சரியாக சுட்டார். 40க்கு 37 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார் மைராஜ் கான். உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் பிரிவில் முதல் முறையாக...
விளையாட்டு

மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி – சீர்காழி அணி வெற்றி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுலைவாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவு பகலாக மின்னொளியில் நடைபெற்று வந்தது. போட்டிக்கு பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர் . பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார் .போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி...
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன்: சிந்து சாம்பியன்

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் நேற்று (ஜூலை 17) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சிங்கப்பூரில் 'சூப்பர் 500' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி இடையே கடும் போட்டி நிலவியது. துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்திருந்த சிந்து பின்னர் அதிரடி காட்டி,...
விளையாட்டு

தொடர்ந்து அசத்தும் பி.வி.சிந்து! சீன வீராங்கனையின் மன உறுதியைக் குலைத்து வெற்றி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில்...
விளையாட்டு

பாகிஸ்தான்-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவான நிலையில் உள்ளது. திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களம்...
விளையாட்டு

குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற வீரர் பலி: எதிராளி தாக்கியதில் உயிரிழந்த சோகம்

மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ், தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் நிகில்(வயது 23). இவர், குத்து சண்டை வீரர் ஆவார். பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஞானஜோதிநகர், பை இன்டர் நேஷனல் கட்டிடத்தின் 5-வது மாடியில் கடந்த 9-ந்தேதி கிக் பாக்சிங் கர்நாடகா என்ற பெயரில் குத்து சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில், மைசூரு மாவட்ட பிரிவில் இருந்து நிகில் கலந்து கொண்டார். அவருடன் பயிற்சியாளர் கிரண்,...
விளையாட்டு

புதுக்கோட்டையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு மாரத்தான்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

ஜூலை 28-ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் ஜூலை 28ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர்...
விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே ஜோடி 17-13 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரியின் எஸ்தர் மெஸ்ஜாரோஸ்-இஸ்வான் பெனி இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 10 மீட்டர்...
விளையாட்டு

ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஜோடி சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. கேப்டன் பட்லர் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார். பும்ரா 19 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட் டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர்...
1 7 8 9 10 11 74
Page 9 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!