செய்திகள்

தமிழகம்

வேலூர் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி அதிரடி. முறைகேடாக பயன்படுத்திய 64 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் குடியாத்தம் வட்டவழங்கல் அலுவலர் வெங்கடேஷ், நுகர்வோர் ஆய்வாளர் ஜோதிராமலிங்கம், உதவியாளர் திவாகர் மற்றும் குழுவினர் குடியாத்தத்தில் 46, பரதராமியில் 18 என 64 என கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ரோட்டில் உள்ள செல்வகணபதி இண்டேன் கேஸ் ஏஜென்சியிடம் ஒப்படைத்தனர்.  இந்த சிலிண்டர்கள் வீட்டு...
தமிழகம்

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பாக இளம் எழுத்தாளர் கவிஞர்.ர.கண்ணன் அவர்களுக்கு தூயதமிழ்ப் பற்றாளர் விருது

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பாக வழங்கப்படும் 2022-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்திற்கான தூயதமிழ்ப் பற்றாளர் விருது நூலாசிரியர், இளம் எழுத்தாளர் கவிஞர்.ர.கண்ணன் அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. நான் மீடியாவின் வாழ்த்துக்கள்....
தமிழகம்

அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, வாரியார் சுவாமிகளின் குருபூஜையில் பங்கேற்பு

வேலூர் மாவட்ட காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்தவாரியார் சுவாமியின் 30 வது குருபூஜையில் அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, வேலூர் மாநகர செயலாளர் அப்பு, வேலூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ரமேஷ், வண்டறந்தாங்கல் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் கூட்டுறவு கடையில் பட்டாசு கடையில் விற்பனையை துவக்கிவைத்த கலெக்டர்

வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி முன்னிட்டு பட்டாசு விற்பனையை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். அருகில் மேயர் சுஜாதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திருகுணஐயப்ப துரை, கற்பகம் கூட்டுறவு துணைப் பதிவாளர் சுவாதி ஆகியோர் உள்ளனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்த வாரியாரின் 30 -வது குருபூஜை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரை சேர்ந்தவர் இந்து ஆன்மீகவாதி கிருபானந்தவாரியார் சுவாமிகள்.  இவரது மறைவுக்கு பின் அவர் காங்கேயநெல்லூரில் கட்டிய முருகன் கோயில் எதிரில் திருஞான வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அவரின் 30 - வது குருபூஜை திருஞான வளாகத்தில் நடந்தது.  அலங்கரிக்கப்பட்ட அவரின் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது.  ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு காட்பாடி ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு செய்த தீயணைப்பு துறையினர்

வேலூர் மாவட்டம் காட்பாடி தீயணைப்பு துறை அலுவலர்கள் பால்பாண்டி, முருகேசன் மற்றும் வீரர்கள் கோபாலகிருஷ்ணன், தீரன், பழனி, ராஜேஷ்குமார் அடங்கிய குழுவினர் காப்பாடிரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளிடம் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? ரயில்பெட்டியில் பட்டாசுகளை எடுத்துச் செல்லகூடாது?  என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி விழா

வேலூரில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் பைபாஸ் சாலை அலுவலகம் மற்றும் நகரின் பலபகுதியில் கட்சியின் கொடி ஏற்று விழா நடந்தது.  வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஸ்டாலின் செல்வராஜ் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு, மாநில செயலாளர் சிவ.இளங்கோ. காஞ்சி மண்டல விவசாய அணி அமைப்பாளர் எஸ்.பி.சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.  காஞ்சிபுரம்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஆணையராக மீண்டும் பொறுப்பேற்ற ஜானகி

வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்த இரத்தினசாமி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஜானகி மீண்டும் வேலூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டு மேயர் சுஜாதாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்.  ஜானகி 2015 -ல் வேலூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்தவர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 13 பன்றிகள் பிடித்து அகற்றம்

வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில், பொதுமக்களிடமிருந்து புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் மண்டலம் 1,வார்டு 9,10,14 ஆகிய பகுதியில் குறிப்பாக பொதுமக்கள் வாழும் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை மண்டலம் 1 காட்பாடி சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு 13 பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது. பன்றிகளை வளர்க்கும் உரிமையாளர்களிடம் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது என கருதி,...
தமிழகம்

வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் சிறப்பு வாக்காளர் திருத்த முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்

வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு வாக்காளர் முகாமில் புதியதாக விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், சேர்த்தல் மற்றும் விலாசமாற்றம் செய்வதை வேலுர்கல்வியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். அருகில் வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உள்ளனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
1 67 68 69 70 71 599
Page 69 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!