செய்திகள்

இந்தியா

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பதவியேற்பு!

புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நாளை பிற்பகலில் பதவியேற்கவுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் துணை நிலை ஆளுநரை சந்தித்தனர். அப்போது சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ரங்கசாமி வழங்கினார். இதை ஏற்றுக்கொண்ட துணைநிலை ஆளுநரை ஆட்சி அமைக்க வருமாரு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு...
தமிழகம்

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை காலமானார். தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாண்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். அவரது மனைவி குமுதாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள்...
தமிழகம்

புதிய கட்டுப்பாடுகள் 2021 : திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி, திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் படி, உணவகங்களில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் நண்பகல்12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களது அறைகளிலேயே உணவு வழங்க...
தமிழகம்

துரத்தும் கொரோனா: தமிழகத்தில் அமலானது புதிய கட்டுப்பாடுகள்; எவையெல்லாம் இயங்கும்?

கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மளிகை காய்கறி கடைகள், பால் ஆகியவை நண்பகல் 12 வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. பேருந்து சேவைகளுக்கு 50 சதவிகித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி,...
இந்தியா

துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி புதுச்சேரியில் 14வது சட்டப்பேரவை கலைப்பு!: அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவுப்படி புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி நேற்றைய தினம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரிமை கோரியிருந்தார். இந்நிலையில் அங்கு ஏற்கனவே உள்ள 14வது சட்டமன்றம் துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி மே மாதம் 3ம் தேதி கலைக்கப்பட்டதாக சட்டமன்ற செயலாளர் முனுசாமி...
இந்தியா

நந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் தொடரக்கூடாது: திரபுரா முதல்வர் கடும் தாக்கு

நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் அமரும் தகுதியை இழந்து விட்டார் என திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விம்ரசித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது. தேர்தலில்...
இந்தியா

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா: பரவியது எப்படி என விசாரணை

ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இந்தநிலையில் கரோனா பரவியது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத், நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கரோனா...
தமிழகம்

“1212 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்” ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!

1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ததற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 1212 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு நாளை மறுநாள் பதவியேற்க உள்ள நிலையில் செவிலியர்களை பணி நிரந்தம் செய்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் வெற்றி...
இந்தியா

ஜேஇஇ முதன்மை தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு!

கொரோனா பரவல் எதிரொலியாக மே மாதம் 24ம் தேதி நடக்கவிருந்த ஜேஇஇ (main exam) முதன்மை தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.57 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது....
இந்தியா

சிறப்பு ரயில்கள் ரத்து.., தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

10 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் குறைவு காரணமாக மே 06 முதல் மே 15 வரை ஆகிய 10 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து தினமும் இரவு 7.05 மணிக்கு திருவனந்தபுரம் புறப்படும் தினசரி சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் காலை 11:35 மணிக்கு...
1 584 585 586 587 588 596
Page 586 of 596

Right Click & View Source is disabled.

error: Content is protected !!