செய்திகள்

இந்தியா

கரோனா சிகிச்சைக்காக நாக்பூரில் 80 படுக்கைகளுடன் ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்தின் இலவச மருத்துவமனை: தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 80 படுக்கைகளுடன் ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்தின் சார்பில் இலவச மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கான இந்த மருத்துவமனையை பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரில் வந்து பாராட்டியுள்ளார். இரண்டாவது அலையில் கரோனாவின் பாதிப்பு மகாராஷ்டிராவில் அதிகம். இதன் இரண்டாவது பெரிய நகரமான நாக்பூரிலும் கரோனா தொற்றாளர்கள் பெருகி வருகின்றனர். இதை ஒட்டியுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இருந்தும் கரோனா நோயாளிகள் நாக்பூரில் சிகிச்சைக்கு...
இந்தியா

மேற்குவங்க 8 ஆம் கட்டத்தேர்தல் – 11 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட்

மேற்கு வங்க தேர்தலில் கடைசிகட்டமாக நடைபெறும் 8 ஆம் கட்டத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவுக்கென 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசிக் கட்டத் தேர்தலில் வாக்களிக்க 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல்களில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும்...
தமிழகம்

தேர்தல் நடத்தும் அலுவலரை ரகசியமாக சந்தித்ததாக அமைச்சர் மீது திமுக வேட்பாளர் புகார்

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ரகசியமாக சந்தித்ததாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப.கமலக்கண்ணனை, அவரது அலுவலகத்தில் ஏப்.26-ம் தேதி தனியாக...
தமிழகம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆலோசனை மேற்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார்...
இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட இன்று முதல் முன்பதிவு: கோ-வின், ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்வது எப்படி?

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் கோ-வின், ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் உச்சத்தை அடைந்து, நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு...
தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறி வழங்கிய கோவை இளம் தம்பதியின் மனித நேயம்…

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் மனித நேயம் மிக்க இளம்தம்பதியினர். இது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. 'தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவையிலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, பல மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. அங்குள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில், ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால்,...
தமிழகம்

ஜவ்வாதுமலை அருகே பழமையான குத்துக்கல் கண்டெடுப்பு

ஜவ்வாதுமலை அருகே உள்ள சாளுர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக் கல் உள்ளதாக செங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, 'தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் அடுத்த சாளுர் கிராமம் மாரியம்மன் கோயில் எதிரே குத்துக் கல் உள்ளது. இது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். 10 அடி உயரமும், 5 அடி அகலம் கொண்டது. முற்காலத்தில்...
வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் பணி: முன்கள பணியாளர்களுக்கு அழைப்பு!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிபுரிய முன்கள பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தோற்றால் நேற்று ஒரேநாளில் 15,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 77பேர் நேற்று உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 13,728ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 1,08,855 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 9,90,919 பேர்...
இந்தியா

அசாமில் பலத்த நிலநடுக்கம்: குவஹாத்தி குலுங்கியது

அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு பலத்த நிலநடுக்கம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 7.51 மணி அளவில் ஏற்பட்டது. 6.4 அளவிலான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டதாக அசாமில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் குவஹாத்தியில் இருந்து சோனித்பூர் வெறும் 150 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. எனவே இந்த நிலநடுக்கம் குவஹாத்தியில் வலுவாக உணரப்பட்டது என்று பிபிசி தமிழிடம் கூறினார் ஒரு குவஹாத்திவாசி....
இந்தியா

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தானாக முன் வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இனி இந்த விவகாரங்களை தாங்களே விசாரிப்பதாக அறிவித்திருந்து. இந்நிலையில், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக...
1 575 576 577 578 579 583
Page 577 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!